அலைபாயுதே மாதிரி ஒரு படம் பண்ண ஆசை... கயல் ஆனந்தி பேட்டி.....
மென்மையான குரல்... மெ வெள்ளந்தி முதல்... சில மணி நேரம் பழகினாலும், எல்லோருக்கும் பிடித்துவிடும் நடிகை ஆனந்தியின் சுபாவம். 'கயல்' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்தாலும், இன்னும் அதே பெயரில் இங்கே அறியப்படுவதில் அவருக்கும் அலாதி ஆனந்தம்! தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகை யானாலும், தமிழில் அவ்வப் போது முகம் காட்டிவிடுகிறார். இப்போது 'உறியடி' விஜயகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'அறிவு' படத்தின் நாயகியான அவருடன் உரையாடியதிலிருந்து..
தமிழில்தான் தனித்த அடையாளம் பெற்று வருகிறீர்கள். அப்படியும் ஏன் திடீரென இங்கே படங்களில் இடைவெளி விழுகிறது?
பிஸியா தெலுங்குல இருந்தாலும், தமிழ்ப் படங்களில் நடிப்பதை ரொம்பவே விரும்புறேன். இப்போ நடிச்சிருக்கிற அறிவு படத்துக்கு முன் நான் ஒப்பந்தமாகி நடித்த 'மங்கை' திரைப்படம் ரொம்பவே நல்ல படம். அது இன்னும் ரிலீஸ் ஆகாம இருக்கு அதுல கொஞ்சம் வருத்தம்.
தொடர்ந்து கதை கேட்டுக்கிட்டே தொடர்ந்து கதை கேட்டுக்கிட்போ இந்த 'அறிவு' கதை யுனீக்கான களமா இருந்துச்சு. உடனே ஒப்புக்கிட்டேன்."
அறிவு மலைப் பின்னணிக் களம் போலத் தெரிகிறதே?
"படத்தோட பெரும்பாலான காட்சிகள் மூணாறுலதான் ஷூட்டிங் போச்சு, இயற்கை சூழ்ந்த இடம் செல்போன் சிக்னல் இருக்காது. லைஃப்ல எப்பவாவது தான் அந்த மாதிரி நாட்கள் அமையும் தொடர்ச்சியா 30 நாட்கள் ஷூட்டிங் போச்சு. டைரக்டர் சத்யசிவா, கேமராமேன் தில் ராஜு" போன்ற டெக்னீஷியன்களோடு
வேலைபார்ப்பது ரொம்பப் புதுமையான அனுபவம் ஹிரோ விஜயகுமார் அடிப்படையில் ஒரு டைரக்டர். ரெண்டு துறையில் யும் அனுபவம் உள்ள ஒரு கோ-ஆசிடரோடு நடிக்கும்போது நிறைய நல்ல விஷயங்கள் தெரிஞ் சுக்க முடியும்"
தெலுங்கில் இப்போது என்ன போய்க்கிட்டிருக்கு?
ஆந்திராவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி கரிவிடி லட்சமியோட பயோபிக்ல நடிச்சிருக்கேன். இந்த மாதிரி பயோபிக் கதைகள்லதான் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் ஒரு முழுமையான வாழ்க்கையைக் காட்ட முடியும் நமக்கும் அதுல ஒரு நிறைவான நடிப்பைக் கொடுத்த ஃபீலிங் இருக்கும்!"
பான் இந்தியா படங்கள், ஓடிடி தளங்களின் வளர்ச்சி பற்றி ஒரு நடிகையாக உங்களது பார்வை என்ன?
"நாம நடிக்கற ஒரு படம் திறைய மக்கள்கிட்ட போய்ச் சேரணும் அதுக்கான சூழல் இப்போ ரொம்பு அதிகமா உருவாகியிருக்கு அதே போல, ஒரு படத்தைக் கிட்ட மிஸ் பண்ணிட்டா மக்கள் அழகா ஓடிடியில பார்க்குற நடைமுறை வந்தாச்சு இதையெல்லாம் ரொம்ப ஆரோக்கியமான சூழலாதான் பார்க்கிறேன்.
“நடிப்பைக் கடந்து எல்லா கிராஃப்ட்ல உள்ள விஷயங்களும் தெரிஞ் சுக்கணும்னு இருப்பேன். ரொமான்டிக், காமெடி வகை கதைக ளை எழுதி, எடுக்கணும்னு ஆசை. "
உங்களுக்கு இயக்கம், எழுத்துத் துறையிலும் ஆர்வம் இருப்பதாகச் கேள்விப்பட்டோமே?
"நடிப்பைக் கடந்து எல்லா கிராஃப்ட்ல உள்ள விஷயங்களும் தெரிஞ்சுக்கணும்னு இருப்பேள் ரொமான்டிக் காமெடி வகை கதைகளை எழுதி எடுக்கணும்ற ஆசை அதிகம் சண்டை இல்லாம் ஒரு லவ் ஸ்டோரி, உதாரணமா அலைபாயுதே' டைப் படங்கள் மாதிரி பண்ணணும்'
What's Your Reaction?













