கருப்பனால் வந்த விடிவுகாலம்.... மினிமம் கேரண்டியுடன் சூர்யாவின் அடுத்த படம்...
சிங்கம் பாகங்களுக்குப்பின் பெரிதளவில் வியாபாரம் ஆகாத சூர்யா படங்களின் கஷ்டக்காலம் கருப்பனுக்கு பிறகு டாப் கியர் எடுத்து போய்க்கொண்டிருக்கிற நிலையில், அடுத்த படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' பட வியாபாரம் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
'சிங்கம்' பாகங்களுக்குப்பின் பெரிதளவில் வியாபாரம் ஆகாத சூர்யா படங்களின் கஷ்டக்காலம் கருப்பனுக்கு பிறகு டாப் கியர் எடுத்து போய்க்கொண்டிருக்கிற நிலையில், அடுத்த படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' பட வியாபாரம் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
நடிகர் சூர்யாவின் 46-வது படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' வெங்கட் அட்லுரி இயக்கத்தில் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. பலகாலமாக சூர்யாவின் படங்கள் வணிகரீதியாக பெரும் வெற்றி பெறாமல் இருந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' படம் ரூ.340 கோடி வசூலை ஈட்டி வணிக ரீதியாகவும், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியையும் பெற்று அவருக்கான மார்க்கெட்டை திரும்பிக்கொண்டுவந்தது. இயக்குனர் வெங்கட் அட்லுரியும் தேசிய விருதுப் பெற்ற 'லக்கி பாஸ்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் கைக்கோர்து 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தை தற்போது முடித்துவிட்டு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், படத்தின் தியேட்டரிக்கல் உரிமத்தை பெற நான், நீ என போட்டி போட்டு வருகின்றனர் திரைப்பட உரிமையாளர்கள். அதிலும் முக்கியமாக வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மற்றும் இயக்குனர் இணையும் படம் என்பதாலும், படத்தில் சூர்யா 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற பெயருடன் குழந்தைக்கு அப்பா என்ற 42 வயதுடைய கதாபாத்திரத்திலும், மமிதா பைஜூ 22 வயதுடன் வயதில் மூத்தோரை காதலிக்கும் நாயகியாக நடிப்பதால் கதையின் கருவும் புதிதாக, விறுவிறுப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்தின் வெளியீட்டு உரிமத்திற்காக வரிசைக்கட்டி நிற்கிறார்கள்.
இந்தநிலையில், தமிழ்நாடு உரிமத்திற்கு ரூ.40 கோடியும் மற்றும் கர்நாடக வெளியீட்டு உரிமத்திற்கு ரூ.6 கோடியும் கொடுத்து 'ஃபிரிமார்க் புரொடக்சன்ஸ்' நிறுவனம் மொத்தமாக 46 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி கேரளா வெளியீட்டு உரிமத்தை 'நியூ சூரியா பிலிம்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, திரைப்பட வெளியீட்டு உரிமை , ஆடியோ, சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமங்களுடன் படவெளியீட்டிற்கு முன்பே ரூ.300 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தயாரிப்பு வட்டாரங்கள் பேசிவருகின்றனர். குறிப்பாக, ஓடிடி தளத்திற்கான உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.85 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்புடன், வெளியாக காத்திருக்கும் இந்த படத்தின் வசூலிற்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படாத வகையில் தியேட்டர் உரிமையாளர்களுடனான வியாபாரங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் ஆறுதலாய் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மீண்டும் சூர்யாவின் படங்களுக்கு எதிர்பார்புகள் இல்லாமல் ரசிகர்கள் படம் பார்க்க சென்றால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் 'கங்குவா'வின் நிலைமை ஏற்பட்டுவிடும் என்று நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
What's Your Reaction?

