மாலைமதி-போகன்வில்லா கனவுகள்!
"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.
1. போகன்வில்லா கனவுகள்!
"உலகில் தன்னைப் பார்த்தே பெருமைகொள்ளக்கூடிய பெண்கள் இருவர். ஒருத்தி நீ மற்றொருத்தி நான்!" என்றாள் சில்வியா. அவள் அணிந்திருந்த மஞ்சள் கார்டிகன், நீல ஜீன்ஸ் இரண்டும். இவள் தினந்தோறும் 6 மணிக்கு முன்பு ஐந்தாறு கிலோமீட்டர்கள் ஓடி, ஃபிட்னெஸை வேற லெவலில் வைத்திருப்பவள் என்று சொல்லியது.
அன்றைக்கு சனிக்கிழமை மாலை 6 மணி, ஆகஸ்ட் 23, 2025. இருவரும் மெதுவாக நடந்தார்கள்.
சித்தர்கள் சொன்ன மாதிரி உண்டி சுருக்கியும், ஆங்கில அறிஞர்கள் சொல்கிற மாதிரி இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருந்தும், தன்னை ஒரு புறா போலப் பார்த்துக்கொண்டாள் சில்வியா. அவளோடு பேசியபடி நடந்தவள் மஹிமா. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவள்.
*சில்வியா, உண்மைதான். கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக உயர்கல்வியில் தனக்கெனத் தனிப்பெயரைப் பெற்று, அமெரிக்காவின் மிகப் பழமையான கல்வி நிறுவனம் என்கிற புகழைக் கொண்டுள்ள இந்தப் பல்கலைக் கழகத்துக்குள் வந்து படிப்பதே எவ்வளவோ பேருக்குக் கனவு! அதனால் உன்னைப் பார்த்துப் பெருமை கொள்வதற்கு உனக்கு எல்லா உரிமைகளும் தகுதியும் நியாயமும் இருக்கிறது'
ஆகஸ்ட் மாத இளவெயிலில் குளிர் அவர்களைக் குளிப்பாட்டத் தொடங்கும் அந்த மாலை வேளையில், நன்றாகக் சுத்தரித்து விடப்பட்ட அல்மாண்டா பக்கவாட்டு வேலிகள் அருகே நடந்துகொண்டிருந்தார்கள்.
புதிதாகப் போடப்பட்ட தார் ரோட்டின் பக்கவாட்டில் வெள்ளைக் கோடுகள் வழி பிரிகிற இடத்தில் என்னென்ன கட்டடங்கள் இருக்கின்றன என்கிற அறிவிப்புப் பலகைகள் துறைவாரியாகக் கட்டடங்கள் நிற்கும் அந்த நிறுவனம் 54 பில்லியன் சொத்துக்களைக் கொண்டது.
மஹிமாவின் ஒரு மைனர் சப்ஸிடெய்ரி சப்ஜெக்ட் ஏ.ஐ.எம்.எல். அவளுடைய ரிசர்ச்சுக்குத் தேவைப்பட்டது.
நெக்ஸ்ட் வீக் உங்க அம்மா வர்றாங்கன்னு சொன்னியே, அது கன்ஃபர்ம்டா? என்று மஹிமா கேட்டாள்.
சில்வியாவின் அம்மா, ஜார்க்கண்ட் கேடரில் ஒரு சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி ராதிகா மைக்கேல் ஐ.பி.எஸ் என்றால், இந்தியா முழுக்கத் தெரியும்.
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் காவல் பயிற்சி அகாடெமியில் அவங்க நான்கு வருடங்கள் டைரக்டராசு இருந்தவங்க. எதையும் சொல்லித் தரமாட்டாங்க; செஞ்சு காட்டுவாங்க!
ஜார்க்கண்டில் சுந்தர்ராஜ் ஐபி.எஸ் என்று ஒரு ஐஜி இருக்கிறார். அவரோடு சேர்ந்து இன்டர்போல் மிஷன் ஒன்றில், இஸ்தான்புல் நகரில் செய்த சம்பவம், க்ரைம் ரெக்கார்டுகளில் இருந்து நீக்கப்படும் அளவு பிரபலமானது.
'ஆமாம் மஹிமா, வர்றாங்க! அப்போ நீயும் என்னோடு வாயேன். நாம மூணு பேரும் சேர்ந்து. டாக்டர் கிறிஸ் நிபாயரைப் பார்க்க டொலடோ யுனிவர்ஸிட்டிக்குப் போகலாம்"
கிறிஸ் ஒரு ஏ.ஐ. பேராசிரியர். ஹியூமன் நியூரோ சைக்காலஜி. அவரது அடுத்த சக்ஸஸ் ஃபில்ட்
"நிச்சயமா சில்வியா, உங்கம்மா வந்தாங்கன்னா, எனக்கு ரொம்பச் சந்தோஷம்! போன முறை அவங்க சொன்னதிலிருந்து கரிசலாங்கண்ணிக் கீரை பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். டோமினோஸ் பீட்சா மேல பொன்னாங்கண்ணி இலைகளைத் தூவிச் சாப்பிட்ட ஃப்யூஷன் எக்ஸ்பிரியன்ஸ் தனி ரகம்!" சுவையை நினைத்துச் சப்புக்கொட்டிக்கொண்டே படிகளில் ஏறினாள் மஹிமா
இடதுபக்கம் 'ரோபோட்டிக்ஸ்' என்று இருக்க. வலது திசையில் ஏ.ஐ லேப் அவர்கள் கண்களுக்கு அகப்பட்டது. 21,000 ஸ்டூடண்ட்ஸும் 2,400 பேராசிரியர்களும் இருக்கிற நிறுவனத்தின் முக்கியமான அந்தக் கட்டிடம் இருப்பதே தெரியாமல் அமைதியாக நின்றிருந்தது.
'இன்னிக்கு செஷன் மேக்ஸ்வெல்தானே எடுக்கப் போறார்.. ஈவ்னிங் எய்ட்டுக்கு லைப்ரரி போகணும் நான்!" என்றாள் சில்வியா.
"சலீம் அங்கே காத்திருப்பான்னு நினைக்கிறேன். மேக்ஸ்வெல் சொல்றது உன் காதுல எவ்வளவு ஏறுதுன்னு பார்க்கிறேன்!" என்று சிரித்தாள் மஹிமா.
இருவரும் வெள்ளை லேப் கோட்டுகளைக் கைகரில் வரிசையாகத் தடவி, ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்தார்கள்.
சில்வியா சட்டென்று தன் கழுத்தைப் பிடித்துக் கொண்டாள், அவள் முகம் வேதனையில் சுருங்கியது அவளுடைய மூக்கிலிருந்து இரண்டு மெல்லிய இரத்தக் கோடுகள் உற்பத்தியானது.
ஏஐஎம்எல்லில் மனித மனங்களில் நினைப்பதைக் கண்டுபிடிக்கிற சாஃப்ட்வேர் உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்த சில்வியா, அடுத்த மூச்சை உள்ளே இழுப்பதற்கான அவசியமின்றி. சுருக்கென்று வலிக்கிற தன் இதயத்தைப் பிடிக்கிற கால அவகாசத்தைக்கைகளுக்குத் தராமல்..
தடாலென்று கீழே சரிந்தாள்.
ஷூ ரேக்கிற்கு அருகே, தன் வெள்ளை கோட் அழுக்காக வாய்ப்புத் தராமல் விழுந்தாள்.
மஹிமா அதிர்ந்தாள். ஒரு சில மைக்ரோ செகண்டுகள் அவளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அடுத்து..
"சில்விஈஈஈ.." மஹிமா கத்தினாள். குனிந்து சில்வியாவின் கன்னங்களைத் தட்டினாள்.
"சில்விட சில்வி" பதற்றத்தோடு அழைத்தாள்.
சில்வியாவின் கண்கள் மேலே சொருகிக்கொள்ள, வெள்ளை நிறம் கண்களில் தென்பட்டது. எந்தச் சலனமும் காட்டாத சில்வியாவைச் சுற்றி, ஒரு சின்ன கூட்டம் சேரத் தொடங்கியது.
சில்வியாவிற்கு என்ன ஆனது?
இனிமேல் என்னவாகும்?
இனிமேல் என்ன ஆக முடியும்?
What's Your Reaction?