மாலைமதி- இஸ்தான்புல்லில் இன்பச் சுற்றுலா!

"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

மாலைமதி- இஸ்தான்புல்லில் இன்பச் சுற்றுலா!
மாலைமதி

இஸ்தான்புல்லில் இன்பச் சுற்றுலா!

இஸ்தான்புல்லில் நீல மசூதிக்குப் பக்கத்தில் இருந்த ஒட்டோமான் ரோட்டில் அந்த சிவப்பு பென்ஸ் கார் சீறிக்கொண்டு சென்றது.
டிணீர்... டிஷ்ஷ்... ரட் ரட் ரட் ரட் ரட்...
சத்தம் காதைப் பிளந்தது.
சுந்தர் தன் காரின் வலப்பக்க ரியர் வியூ மீர்ரரை இழந்திருந்தார்.
அந்த கார் கூபே டைப் சைடில் உள்ள வலது கதவைத் திறந்து, தன் துப்பாக்கியை மட்டும் வெளியே நீட்டிப் பின்னால் அந்தத் துப்பாக்கி புரொஜெக்டைல்களின் 'பேத்வே'யைக் கணித்து, அதை இயக்குகிற கையைச் சுடுவது அவரது நோக்கம்!

என்.பி.ஏவில் தொடர்ந்து ஆறுக்கு ஆறு 'புல்ஸ் ஐ' போட்டவர் சுந்தர். அந்த ரெக்கார்டை சுதாகர் IPS தான் 2003ல் வந்து சமன் செய்தார்.
இன்னும் நிறைய உள்ளது. அப்புறம் சொல்கிறேன். இப்போ சண்டைக் காட்சி! வளவளன்னு பேச நேரமில்லே!
தெற்கே மர்மரா கடலுக்கும் வடக்கே கருங்கடலுக்கும் இடையில் உள்ள இஸ்தான்புல் நகரை போஸ்பரஸ் நீர்வழி இரண்டாகப் பிரித்துள்ளது.
பின் சீட்டில் மிகப் பிரபலமான அலிஃப் சஃபாக் என்கிற பெண் எழுத்தாளர் மறைந்து அமர்ந்திருக்கிறார். அவரைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவருவது சுந்தர் கடமை.

காரில் சுந்தரின் அருகே, கறுப்பு டைட் ஃபிட் ஜாக்கெட், கறுப்பு லெதர் ஸ்கின் ஃபிட் பேன்ட்டில், முடியை ஒரு கமேண்டோ போன்றுவெட்டியிருந்த ராதிகா மேடம் ட்ரிகரை அழுத்தினார்.
பின்னால் துரத்திய கார் திரும்பிப் பக்கவாட்டில் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைய, சிவப்பு பென்ஸை இரண்டு பைக் ரைடர்கள் முழுமையாக மூடிய ஹெல்மெட்டோடு துரத்தத் தொடங்கினார்கள்.
“சுந்தர்... யூ கீப் ஸ்டெடி! ஒன்ஸ் நாம இந்த ஸ்ட்ரெய்ட்டைத் தொட்டுட்டோம்னா போதும், ஆசியாக் கண்டத்தையே தாண்டிவிடுகிறோம்." கிழக்கிலிருந்து மேற்காகச் சீறிப் பாய்ந்தது கார்.
ராதிகா பின்னால் அலிஃப் மேடத்திடம் பேசினார்.
"மேடம், நீங்க எக்காரணம் கொண்டும் கவலைப்படாதீங்க! தலையை மட்டும் தூக்கிராதீங்க. கேஜிபி உளவாளி அன்டானியோவை பல்கேரியா கொண்டு போகும்போது டிக்கியில் அடைச்சிருந்தோம். அதுக்கு நீங்க பரவாயில்லை!"
சுந்தர் தன்னுடைய பங்கிற்குக் காரைச் சட்டென்று பிரேக் அடிக்க, ஒரு கடை முன்பாக, பின் காரில் மேதிய பைக்வாலா, காருக்கு முன்னால் தூக்கி இருபதடி தூரம் வீசப்பட்டுத் தலைகீழாகத் தன் ஹெல்மெட் மீதே லேண்ட் ஆனார். அதேசமயம், இரண்டாவது பைக்கரை தனது வலிமையான இடது கையால் பிடித்து இழுத்துக்கொண்டே காரை நிற்காமல் விரட்டினார் சுந்தர்.
பைக்கில் வந்தவர் தொடர்ந்து பைக் மீதே அமர்ந்திருந்தாலும் அவர் உட்கார்ந்திருந்த வண்டி சுந்தருடைய சொல்படி ஓடியது. சுந்தர் கைவிட்டதும் பேலன்ஸ் இழந்த அந்த பைக்கர் தரை மகளைக் கம்பராமாயணத்தில் இராவணன் தழுவியது போலத் தழுவினான்.
“சுந்தர்... ஒருபோதும் நீ நான் சொல்வதைக் கேட்பதுமில்லை... ஏன் என்று நானும் கேட்பதில்லை.."

ராதிகா சொன்னபோது, கவனமாக வாய்பிளந்து நின்றிருந்த அந்தக் கப்பலின் வயிற்றுக்குள் காரைச் செலுத்தினார் சுந்தர். மூவரும் காரிலிருந்து இறங்கியபோது மிகச் சரியாக மைக்கேல்,
கப்பலுக்குள்ளிருந்து ஒரு பூங்கொத்தோடு வந்தார்.
மைக்கேல் IPS, ராதிகாவின் கணவர். இருவரும் ரகசிய போலீஸில் இருக்கின்றார்கள். அவர்கள் ஐ.பி.எஸ் ஆன புதிதில் சரியாக இருபத்து மூன்று வருஷங்கள் முன்பு, ஐ.ஐ.டி மும்பையில் ஒரு சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சிக்காகச் சென்றபோது சந்தித்தார்கள்.
இங்கிலாந்தின் உலகப்புகழ் பெற்ற வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் துறை நிபுணர் பீட்டர் கனி அவர்களுக்கு வகுப்பெடுத்தார். அவர்களிடையே நிகழ்ந்த காதல் குண்டு வெடிப்பைத்தான் அவர்களால் தவிர்க்க முடியவில்லை.
2001ல் குஜராத் நிலநடுக்கச் செய்தி வந்தபோது, தன் பெண்ணைக் கைப்பிடித்துக் கொடுக்க வேண்டியது மைக்கேலுக்குத்தான் என்பது நடுக்கத்தோடு கௌரிக்குத் தெரியவந்தது.

இதற்கிடையில் இனியா தமிழ்நாடு போலீஸில் காவல் உதவி ஆய்வாளராகச் சேர்ந்திருந்தார். காலப்போக்கில் இனியா எஸ்.பியாகக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தார். மைக்கேல் அவர்கள் இருந்த 'ரோல் ஆன், ரோல் ஆஃப் கப்பலை நகர்த்த உத்தரவிட்டார்.
அது போஸ்போரோஸ் நீர்வழியில் வலதுபுறம் நகரத் தொடங்கியது. வடக்கே இருந்த கருங்கடலை அடைந்துவிட்டால் எதிரிகளின் தொல்லை இல்லை.

"வெல்கம் ஆன் போர்டு ஆலிஃப் மேடம்! யூ ஆர் டோட்டலி சேஃப் நவ்."
மைக்கேலை நோக்கி ஒரு புன்னகையோடு சேர்ந்த பெருமூச்சுவிட்டுக் கொண்டே அந்த எழுத்தாளர் என்று அறியப்படக்கூடிய இன்ஃபார்மர் மெதுவாகக் கைகால்களை அசைத்துப் பார்த்துக் கொண்டார். நடந்தவை எல்லாம் ஒரு கனவு போல இருந்தது.
அதே நேரத்தில், இன்னொரு கனவு இன்னொரு உலகத்தில், காணப்பட்டுக் கொண்டு இருந்தது. அதில் மைக்கேல் ஸ்பேஸ்
ஸ்டேஷனில் இருக்க, ராதிகா பரத நாட்டியம் ஆடிக்கொண்டு இருப்பார். இப்பொழுது நாம் காண்கிறவர்கள் அதைக் காணவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow