CSK vs LSG: சுழற்பந்து வீச்சில் சிக்கிய லக்னோ.. பாதி வெற்றி கிணறை தாண்டிய சென்னை அணி!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோவில் சென்னை மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அஸ்வின், கான்வே ஆகியோர் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட நிலையில் ஷேக் ரஷீத், ஓவர்டன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்தத் தொடரில் சென்னை அணியின் லக்கி சார்ம் ஆக விளங்கும் கலீல் அகமது மார்க்ரம் விக்கெட்டை பவர் ப்ளேக்குள் வீழ்த்த ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த வருடம் லக்னோ அணிக்கு நம்பிக்கைக்குரிய நாயகனாக விளங்கி வந்த பூரான் 8 ரன்னின் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
ஜடேஜா, நூர் அகமது தங்களது சுழலில் அசத்த ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது லக்னோ அணி. நூர் அகமது நான்கு ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஜடேஜா 3 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பொறுமையாக ரன்கள் எடுத்த வந்த லக்னோ அணியினர், சீரான இடைவெளியில் விக்கெட்களையும் பறிக்கொடுக்கத்தனர். லக்னோ அணியின் கேப்டன் பண்ட் மட்டும் மறுமுனையில் நிதானமாக விளையாடி 63 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் பதிரானா பந்துவீச்சில் பண்ட் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது லக்னோ அணி. 180 ரன்களுக்கு மேலான இலக்கினை சில ஆண்டுகளாக எட்டமுடியாமல் தோல்வியினை சந்தித்து வரும் சென்னை அணி, 170 ரன்களுக்குள் லக்னோ அணியினை கட்டுப்படுத்தி பாதி வெற்றி கிணறை தாண்டியுள்ளது சென்னை என நெட்டிசன்கள் முதல் இன்னிங்க்ஸ் முடிவில் கமெண்ட் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியுள்ளது சென்னை அணி. தொடரில் ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய இந்த போட்டியில் வெற்றி பெறுவது உதவும் என்பதால் சென்னை அணியின் வெற்றியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?






