தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண விவகாரம் - மவுனம் காக்கும் தவெக அரசு!

தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் அதிக வசூலிக்கப்படுவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்த தவெக அரசு தற்போது எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 13, 2026 - 15:19
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண விவகாரம் - மவுனம் காக்கும் தவெக அரசு!

எம்பிபிஎஸ் படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  அதனை மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதல் கட்டணம் அல்லது ஐந்தாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் வசூலிப்பது விதிமீறலாகும். இதுதொடர்பான விதிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் விதிமீறல்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நிலவும் இடைவெளிகளும் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தேசிய அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.2.50 லட்சம் வரையும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.25 லட்சம் வரையும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம், கல்விக் கட்டணம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 மற்றும் இளங்கலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறைகள், 2024 ஆகியவற்றின்படி, வகுப்புகள் நடைபெறும் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு மேல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஐந்தாம் ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக அரசு எச்சரித்திருந்தது. ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் அரசு மவுனம் காத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

எம்பிபிஎஸ் படிப்பில் நான்கரை ஆண்டுகள் கல்வி பயில வேண்டும் என்பதுடன், அதன்பிறகு மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்பதே விதிமுறையாகும். இந்நிலையில், சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஐந்தாம் ஆண்டிற்கும் முழுமையான கல்விக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது அந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow