மாணவர்கள் மீது வீசப்பட்ட பெல்லட் குண்டுகள் ... அதன் ஆபத்துகள் இவ்வளவா?
டெல்லியில் NEET போராட்டத்தின் போது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவை மனித உடலில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான மற்றும் நிரந்தர பாதிப்புகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
NEET தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், தடியடி நடத்தியதாகவும், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தச் சூழலில், பெல்லட் குண்டுகள் (Pellet Guns) மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. கூட்டத்தைக் கலைப்பதற்கான "குறைந்த ஆபத்துள்ள ஆயுதம்" என்று கருதப்பட்டாலும், அவை கடுமையான மற்றும் நிரந்தர உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்று மருத்துவ நிபுணர்களும் மனித உரிமை அமைப்புகளும் எச்சரித்து வருகின்றன.
பெல்லட் குண்டுகள் நூற்றுக்கணக்கான சிறிய உலோகத் துகள்களை அதிக வேகத்தில் பாய்ச்சும் தன்மை கொண்டவை. அவை உடலில் ஊடுருவி பல்வேறு உறுப்புகளை சேதப்படுத்தக்கூடும்.
கண் பார்வை இழப்பு:
பெல்லட் குண்டுகள் கண்களில் தாக்கினால் கண்பாவை கடுமையாக சேதப்படுத்தி நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
தோல், தசை மற்றும் எலும்பு பாதிப்பு:
உடலில் பாயும் சிறிய உலோகத் துகள்கள் தோலைத் துளைத்து தசைகள், நரம்புகள் மற்றும் எலும்புகளை சேதப்படுத்தி ஆழமான காயங்களை ஏற்படுத்தும்.
உள் உறுப்புகளுக்கு ஆபத்து:
தலை, மார்பு அல்லது வயிற்றுப் பகுதியில் பெல்லட் குண்டுகள் தாக்கினால் உள் உறுப்புகள் சேதமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.
மனநல பாதிப்பு:
பார்வை இழப்பு அல்லது நிரந்தர உடல் ஊனம் போன்ற விளைவுகள் மனச்சோர்வு, மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
வாழ்வாதார பாதிப்பு:
கடுமையான காயங்கள் காரணமாக பலர் வேலைவாய்ப்பை இழந்து, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. டெல்லி NEET போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
What's Your Reaction?