பள்ளிக்கல்வி முதல் வனத்துறை வரை... கைமாறும் இலாகாக்கள்...அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஷாக்?

அமைச்சர் ராஜ்மோகன் வசம் இருக்கும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறையை பிரித்து, இரண்டு அமைச்சர்களிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

Sep 5, 2026 - 15:00
பள்ளிக்கல்வி முதல் வனத்துறை வரை... கைமாறும் இலாகாக்கள்...அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஷாக்?

அதன்படி, பள்ளிக்கல்வித்துறையை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வேளச்சேரி குமாரிடம் கூடுதலாக வழங்கவும், செய்தி மற்றும் விளம்பரத்துறையை அமைச்சர் ரமேஷுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவுக்கு வனத்துறையையும் கூடுதலாக வழங்குவது குறித்தும் பேச்சுகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் இருந்து திரும்பியதும் ...

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்துக்குப் பிறகு அமைச்சரவையில் பெரிய அளவில் இலாகா மாற்றங்கள் இருக்கலாம் என்ற பேச்சு தற்போது சூடுபிடித்துள்ளது. இதனால், தங்களது துறைகளில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பில் சில அமைச்சர்கள், தவெக மேலிடத்துடன் இப்போதே ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படியானால்... லண்டன் பயணத்துக்குப் பிறகு தவெக அமைச்சரவையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகின்றன? என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்த நிலையில்,
1.    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு நிதி + நகராட்சி நிர்வாகம்
2.    நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கு தொழில்துறை
3.    தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு சமூக நலத்துறை
4.    ஏ ஐ துறை வேளச்சேரி குமாருக்கு பள்ளிக்கல்வித்துறை
5.    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு செய்தி & விளம்பரத்துறை 
6.    கனிம வளத்துறை பிரபுவுக்கு கூடுதல் வனத்துறை
ஆகியவை ஒதுக்கப்படலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow