நின்றிருந்த லாரி மீது மோதிய கார்... 4 பேர் உயிரிழந்த சோகம்...

தஞ்சாவூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

May 7, 2024 - 21:54
நின்றிருந்த லாரி மீது மோதிய கார்... 4 பேர் உயிரிழந்த சோகம்...

அரியலூரில் இருந்து லாரி ஒன்று ஜல்லி ஏற்றிக் கொண்டு, தஞ்சாவூர் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில், அந்த லாரியானது, அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், ஏலாக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தஞ்சாவூர் நகர பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (24), புவனேஷ் கிருஷ்ணசாமி (18), செல்வா (17) மற்றும் சண்முகம் (23) ஆகிய நான்கு பேரும் அரியலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் தஞ்சை நோக்கி சென்றுள்ளனர். 


அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், விபத்து குறித்து நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow