”உதயநிதி இப்படி இருக்குறது பலன் இல்லை..” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
துணை முதலமைச்சர் உதயநிதி வார்ரூமில் இருந்து பலன் இல்லை...களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி வார்ரூமில் இருந்து பலன் இல்லை...களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவமழை காலம் தொடங்கிவிட்ட நிலையில், மதுரை, திருச்சி, சென்னை போன்ற பகுதிகளில் முன்னேற்பாடுகள் எதுவும் இல்லை எனவும், உதயநிதி வார்ரூமில் இருந்து வேலை செய்வதற்கு பதிலாக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மின் கம்பிகள் அறுந்து பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், திமுக விடியல் அரசாக இல்லை விளம்பர அரசாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, பாஜக பயங்கரவாதி கட்சி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, பாஜக பயங்கரமாக மக்களுக்கு சேவை செய்கிற கட்சி, பயங்கரமாக தொண்டர்கள் படை வைத்திருக்கிற கட்சி என கூறினார்.
எதிரணியில் உள்ள கூட்டணி கட்சிகளை பயங்கரமாக அச்சுறுத்துகிற கட்சி எனவும், காங்கிரஸ் கட்சியை தாங்கள் பயங்கரமாக மிரட்டி கொண்டிருப்பதால் அவர் தங்களை பயங்கரமாக கட்சி என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?