4 ஆண்டுகள் காத்திருந்து சூர்யாவை பழிவாங்கிய SK..? வைரலாகும் ட்வீட்..!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா இடையேயான ‘ஈகோ கிளாஷ்’ பேசுபொருளாகியுள்ளது.

Sep 11, 2026 - 16:30
4 ஆண்டுகள் காத்திருந்து சூர்யாவை பழிவாங்கிய SK..? வைரலாகும் ட்வீட்..!

கடந்த 2022ஆம் ஆண்டு ஒரே வார இறுதியில் சூர்யாவின் ‘சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படங்கள் வெளியாகின. அப்போது ‘சர்தார்’ படத்திற்கு ஆதரவாக சூர்யா தரப்பில் இருந்து “Good content always wins big” என்ற கருத்து பதிவிடப்பட்ட நிலையில், அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்திற்கு வெறும் வாழ்த்து தெரிவிக்கும் வகையிலேயே பதிவு போட்டிருந்தார். 


இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. சூர்யாவின் ‘சர்தார் 2’ திரைப்படமும், ‘மண்டாடி’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சிவகார்த்திகேயன் தரப்பில் வெளியான சமூக வலைதளப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த முறை சூர்யா பயன்படுத்திய “Good content always wins big” என்ற வரியைப், ‘மண்டாடி’ படத்திற்கு ஆதரவாக சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார் என்றும், அதேவேளையில், கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்திற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் சாதாரண வாழ்த்து மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், தற்போது சர்தார் படத்திற்கு வெறுமனவே வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயனின் பதிவுகள் கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளன.

உண்மையில் இது திட்டமிட்ட பதிலடியா? அல்லது தற்செயலான ஒற்றுமையா? 4 ஆண்டுகள் காத்திருந்து சூர்யாவை பழிவாங்கினாரா சிவகார்த்திகேயன்? என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் ‘சர்தார் 2’ vs ‘மண்டாடி’ போட்டியுடன், பழைய சம்பவமும் மீண்டும் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow