உடன்பிறப்புகளின் STING OPERATION...? இளைஞரணி டேபிளில் தவெகவின் முக்கிய Pendrive?

ஊழல் இல்லாத தூய ஆட்சியை கொடுப்போம் என்று மார்த்தட்டி பேசி கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் ஆட்சியிலேயே ஊழல் தலைவிரித்தாடுவதாக கூறப்படும் நிலையில், அதுதொடர்பாக ஒரு Sting ஆபரேஷனை உடன்பிறப்புகள் செய்திருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இன்றைய ஹாட் நியூஸ். 

Aug 31, 2026 - 18:30
உடன்பிறப்புகளின் STING OPERATION...? இளைஞரணி டேபிளில் தவெகவின் முக்கிய Pendrive?
Vijay-Udhayanidhi Stalin

தமிழ்நாட்டில் நாங்க மட்டும் ஆட்சிக்கு  வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று அரசியல் களத்தில் குதித்தது தவெக. இதுவரையிலே திமுக அதிமுக என்று இருவரின் ஆட்சி கொடி மட்டும் பறந்திருந்து கொண்டிருந்த நிலையில், அதனை பிடிங்கி எரிந்து, தற்போது யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டில் கொடிக் கட்சி பறந்து கொண்டு இருக்கின்றது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

இரு திராவிட கட்சிகளின் நிலைமையை மாற்றி நாங்கள் தான் தூய்மையான ஆட்சியை நடத்துவோம் என்றும், இதுவரை யாரும் செய்யாத ஆட்சியை நாங்கள் கொடுப்போம் என்றும் மார்ததட்டி கொண்டு பஞ்ச் டயலாக்கெல்லாம் விட்டார் முதலமைச்சர் விஜய். 

இந்நிலையில், இந்த வெற்றி ஆட்சியில்... தூய ஆட்சியில்... பரிசுத்தமான ஆட்சியில்... ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யமாட்டோம் என்று சொல்லும் ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் சைலண்டாக நடந்துக் கொண்டிருக்கிறது என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சமீபத்தில் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது மாடிக்கு முதலமைச்சரின் அலுவலகம் மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஏனென்றால் தற்போதைய அலுவலகத்தில் முதலீட்டாளர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் உடன் பணிபுரியும் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உரிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவு, அதனால் தலைமைச் செயலகத்தை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஒருங்கிணைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எளிய பின்னணியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணியை தடையின்றி மேற்கொள்ளும் வகையில்  புதிய கார் அரசு சார்பில் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து மாஸ் காட்டினார்.  

இதற்காக ஓட்டுநர் சம்பளம், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வழங்கப்படும் என்றும், மேலும் எம்எல்ஏக்களின் அலுவலகப் பணிகளை கவனிக்க தனிநபர் உதவியாளரை நியமிக்க மாதந்தோறும் ரூ. 25,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

இங்க தான்ங்க ட்விஸ்ட்டே இருக்கு, என்னமோ நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம் , இதற்கு முன்னால் ஊழல் செய்தவர்களையும் விடமாட்டோம், என்றெல்லாம் வீரவசனம் பேசி வந்த முதலமைச்சர் விஜய் ஆட்சியில், முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு விடப்பட்ட ரூ.5 கோடி டெண்டர் விவகாரமும், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது, முதலமைச்சர் அலுவலக விவகாரத்திலேயே ஊழல் நடக்கிறது என்று மலர்க்கட்சி தரப்பில் விஜிலென்ஸில் புகார் கொடுக்க ஏற்பாடு நடக்கிறதாம். இதை ஸ்மெல் செய்த ஆளும்தரப்பு இவ்விரு திட்டங்களையும் ரத்து செய்துவிடலாமா என தீவிர  டிஸ்கஷனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல்  அறிவாலயமும் ஏதோ திட்டம் தீட்டியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. "முதலமைச்சர் விஜய் ஊழல் இல்லா அரசு' என்று மார்தட்டிக்கொண்டாலும், இலைமறை காயாக சில அமைச்சர்கள் கைநீட்டுவதை அறிவாலயம் ஸ்மெல் செய்துவிட்டதாம். 

இதை எக்ஸ்போஸ் செய்வதில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கும் அறிவாலயம், அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதை கையும் களவுமாக பிடிக்கும் வகையில் 'ஸ்டிங் ஆபரேஷன்' ஒன்றை மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ள தயாராகி வருகிறதாம். 

அதாவது, வீடியோ ஆதாரம் கிடைத்தவுடன் சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை கதிகலங்க வைப்பதுதான் உடன்பிறப்புகளின் பிளான் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

உடன்பிறப்புகள் விரித்த வலையில் நீலகிரியில் சில அரசுத்துறை புள்ளிகள் கொத்தாக மாட்டியிருக்கின்றனர் கூறப்படுகிறது. அதாவது,  வனம், பத்திரப்பதிவு உள்ளிட்ட நான்கு துறைகளை சேர்ந்தோர் இரண்டு வெவ்வேறு மெகா ப்ராஜெக்ட்களுக்கான அப்ரூவல், என்.ஓ.சி. ஆகியவற்றுக்காக பேரம் பேசியதையும், அந்த வகையில் 36 ‘லட்டுகள் கைமாறியதையும் வீடியோ பதிவு செய்திருக்கிறது உடன்பிறப்புகள் டீம்.

அதேபோல், கூடலூரில் பேக்கரி ஒன்றிலும், கோவை கருமத்தம்பட்டி தாபா ஒன்றிலும் லட்டுகள் கைமாறி இருக்கின்றனவாம். இப்படி பக்காவாக ஸ்டிங் ஆபரேஷனை முடித்துவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதைப் போட்டுக்காட்டிய உடன்பிறப்புகள், 'இதுல எந்தத்துறை அமைச்சர்களுக்கு எவ்வளவு பங்குப்போகுது? அதை சொல்லிட்டா, உங்க முகங்களை வீடியோவில் மறைச்சுடுறோம்' என்று சொல்லி பெரிய திமிங்கலங்களுக்கு வலை விரித்திருக்கிறார்களாம். 

ஆனால், ”கேபினெட்டுக்கு பங்கு கொடுக்குற நிலை இப்போ இல்ல. இது எங்க மேலதிகாரிகளுக்கு போகவேண்டியது. இதை நீங்க வெளியிட்டா எங்களை சஸ்பெண்ட் தான் பண்ணுவாங்க. அதுவே விட்டுட்டீங்கன்னா, அமைச்சர்கள் வாங்க தொடங்கியதும் சூடாக தகவல் பாஸ் பண்றோம்” என சரண்டர் ஆகிவிட அந்த வீடியோ பெண்ட் டிரைவ் இளைஞரணி டிராயரில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறதாம்.

ஊழல் இல்லாத ஆட்சி என்று பேசிகொண்டிருந்த முதலமைச்சர் வாயை மூட வைக்க தாமரையும், சூரியனும் தனித்தனியாக திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன. உண்மையை மட்டும் நீருபித்து விட்டால் முதலமைச்சர் நிலைமை என்னவாகும்? 

இதற்கெல்லாம் முதலமைச்சர் விஜய் என்ன பதில் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow