மதுரை ஆவின் நிறுவனத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் சம்பவம்... மக்கள் எதிர்ப்பு.. விசாரணை ஒத்திவைப்பு!

ஆவின் நிறுவனத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

Apr 18, 2024 - 21:55
மதுரை ஆவின் நிறுவனத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் சம்பவம்... மக்கள் எதிர்ப்பு.. விசாரணை ஒத்திவைப்பு!

மதுரை ஆவினில் சமையல் எரிவாயு பயன்படுத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

ஆவின் நிறுவனத்தில் பகல் நேரங்களில் எல்.பி.ஜி கேஸ் மூலம் கொதிகலன்கள் பயன்படுத்தப்பட்டாலும், இரவு நேரங்களில் பர்னஸ் ஆயில் மூலம் கொதிகலன்கள் இயக்கப்படுகின்றது. இதன் காரணமாக ஆவின் நிறுவனத்தில் உள்ள புகை குழாய்கள் மூலம் அதிகளவில் நச்சு கரும்புகைகள் வெளியேறி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

இதனால், இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்புறங்களில் துவைத்து காயப்போடும் துணிகளில் அதிக அளவில் கார்பன் படர்ந்து காணப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ஆவின் நிறுவனத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ராஜசபை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் பர்னஸ் ஆயில் மூலம் கொதிகலன்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு  3 மாதங்களில் எல்.பி.ஜி கேஸ் மூலம் கொதிகலன்கள் பயன்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை, எனவே எல்பிஜி கேஸ் மூலம் கொதிகலன்களை பயன்படுத்த நடைமுறைப்படுத்த உத்தரவிட கோரி மனுவில் தெரிவித்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow