2 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு, தருமபுரியில் சவுமியா: 15 தொகுதி பாமக வேட்பாளர் பட்டியல்
2 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அன்புமணி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். தருமபுரியில் சவுமியா, பெரம்பூரில் திலகபாமா என 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் வேட்பாளர்களை கட்சிகள் அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 18 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 3 தொகுதிகளுக்கு பா.ம.க. வேட்பாளர்கள் அன்புமணி அறிவித்தார். இந்த நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டுள்ளார்.
அதன்படி தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், பாமக சார்பில் திலகபாமா போட்டியிட உள்ளார். தருமபுரி தொகுதியில் அன்புமணி மனைவி சவுமியா களமிறங்கிறார். சிட்டிங் எம்எல்ஏக்கள் சேலம் வடக்கு - சதாசிவம், விக்கிரவாண்டி-சிவக்குமார் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்போரூர் தொகுதியில் வக்கீல் பாலு, போளூர்- சி.ஆர்.பாஸ்கரன்.
விருத்தாசலம் - தமிழரசி, சேலம் மேற்கு - கார்த்திகா, பென்னாகரத்தில் பாடி வெ.செல்வம், ஜெயங்கொண்டம் - வைத்தி, சோளிங்கர் - சரவணன், மயிலாடுதுறை - சித்தமல்லி, உத்திரமேரூர் - மகேஷ்குமார், ரிஷிவந்தியம் - செழியன், காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதியில் அன்பு.சோழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
What's Your Reaction?

