தரை வழித்தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிக்கு செல்வார்கள் : ஈரான் எச்சரிக்கை
தரை வழித்தாக்குதலில் அமெரிக்க ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் சவப்பெட்டிக்கு செல்வார்கள் என ஈரானின் தெஹ்ரான் டைம்ஸ் பத்திரிக்கை முதற்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில், அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தெஹ்ரானை இலக்காகக் கொண்ட இராணுவ நடவடிக்கையிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் வளைகுடா நாடுகளை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் எச்சரித்திருந்தார்.இந்நிலையில் தெஹ்ரான் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" என்ற தலைப்பின் கீழ் தரைவழி தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டுப் படைகள் "சவப்பெட்டிகளில் மட்டுமே வெளியேறும்" என்று செய்தி வெளியிட்டுள்ளது .
தரைவழிப் படையெடுப்பு தொடங்கினால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று ஈரான் அமெரிக்காவைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இப்போது, தெஹ்ரான் டைம்ஸ், அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
2-ஆக உடைந்த அமெரிக்க விமானம்
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தின் (Prince Sultan Air Base) மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன உளவு மற்றும் கட்டுப்பாட்டு விமானமான E-3 Sentry மிக மோசமாகச் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், அந்த படங்களில் விமானத்தின் உடல் பகுதி இரண்டாக உடைந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
E-3 Sentry விமானம் வெறும் போர் விமானமாக மட்டும் இல்லாமல் வானில் பறக்கும் கட்டுப்பாட்டு அறை போல செயல்பட்டு வந்தது. இந்த விமானத்தின் முன் பகுதியில் இருக்கும் பெரிய வட்ட வடிவ ரேடார் (Rotodome), 400 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எதிரி ஏவுகணைகள் மற்றும் விமானங்களைக் கண்டறியும் திறன் கொண்டது. இரானுடனான போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு ஏவுகணை எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்குவதில் இது முக்கியப் பங்கு வகித்த நிலையில், அந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

