காஞ்சிபுரம்: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Dec 11, 2023 - 14:33
Dec 11, 2023 - 15:28
காஞ்சிபுரம்: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு பணம் தராமல் இருக்கும் நபர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காட்ரம்பாக்கம் கிராமத்தில் 10 கிரவுண்ட் வீட்டு மனை உள்ளது.இதனைக் கடந்த 2018ல் சென்னை சேர்ந்த விஜய் என்பவருக்கு ஒரு கிரவுண்ட் நிலம் விற்கப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து மேலும் கூடுதலாக நிலம் வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றி வாங்கியுள்ளனர்.

அவர்களை மிரட்டி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.மேலும் ராஜேஷ் விஜய் அருளானந்தம் பாலகுமாரன் ஆகிய நான்கு நபர்கள் கூடுதலாக அவர் இடமிருந்த நிலத்தையும் பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளார்.இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் 2018 வழக்கு தொடரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளது. 

மேலும் இவர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும், அதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தந்து இடத்தையோ அல்லது அதற்குண்டான தொகையை மீட்டு தர வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பணியில் இருந்த ஓட்டுநர்கள் மற்றும் அலுவலர்கள், காவலர்கள் என அனைவரும் விரைந்து அப்பெண்னை மீட்டு தண்ணீர் ஊற்றி முதலுதவி செய்தனர். தற்போது வருவாய் கோட்டாட்சியர் ரம்யா  அந்த பெண்ணிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறை பாதுகாப்பு பணியில் இல்லாததே இதுப்போன்ற சம்பவங்கள் நிகழ காரணம் என கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow