5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Jun 15, 2026 - 08:15
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் அருகிலுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக இன்று (ஜூன் 15) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 16) நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow