தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? பாஜக வியூகம், ரசிகர் மன்றம், உள்ளாட்சி தேர்தல்... கொடி பறக்குமா?
கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில், முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்தபிறகு, திரை பிரபலங்கள் பலருக்கும் அரசியல் ஆசை துளிர்விட தொடங்கிவிட்டது. அந்த வரிசையில் நடிகர் தனுஷும் இணைந்துவிட்டார் என்று தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. அதற்கேற்பத்தான் அவரது சமீபத்திய செயல்பாடுகளும் இருக்கின்றன. இதன் பின்னணியில் பா.ஜ.க.வின் சில பல அரசியல் கணக்குகளும் இருப்பதாக சொல்லப்படுவதுதான் அரசியல் ஸ்கூப்!
க ட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில், முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்தபிறகு, திரை பிரபலங்கள் பலருக்கும் அரசியல் ஆசை துளிர்விட தொடங்கிவிட்டது. அந்த வரிசையில் நடிகர் தனுஷும் இணைந்துவிட்டார் என்று தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. அதற்கேற்பத்தான் அவரது சமீபத்திய செயல்பாடுகளும் இருக்கின்றன. இதன் பின்னணியில் பா.ஜ.க.வின் சில பல அரசியல் கணக்குகளும் இருப்பதாக சொல்லப்படுவதுதான் அரசியல் ஸ்கூப்!
இதுகுறித்த உள்விவரங்களை அறிந்தவர்களிடம் பேசினோம். இன்றைய தலைமுறை திரை பிரபலங்களில், விஜய்க்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள அஜீத்துக்கு, அரசியல் ஆசை இல்லை. அடுத்தபடியாக உள்ள சூர்யா, சிவகார்த்திகேயன். தனுஷ் சிம்பு உள்ளிட்டோரில், ரசிகர்களை அடிக்கடி சந்தித்து, அவர்களுடனான உறவை வளர்ப்பதில் தனுஷ் முதலிடத்தில் இருக்கிறார். தமிழகத்தில் 7,000 பதிவு செய்யப்பட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. தவிர, பதிவுக்கு அனுமதி கேட்டு 2,000க்கும் மேற்பட்ட மன்றங்கள் விண்ணப்பித்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள இந்த மன்றங்கள், மண்டலவாரியாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த்போல, தனுஷூக்கு 'திருடா திருடி' இயக்குநர் சுப்பிரமணிய சிவா, ரசிகர் மன்றத் தலைவராக இருந்து ரசிகர்களை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபகாலமாக ஷூட்டிங் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளில், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை, சென்னைக்கு
வரவழைத்து அவர்களோடு போட்டோ எடுத்து. விருந்து கொடுத்து அனுப்பிவருகிறார் தனுஷ் அப்போது, 'உங்கள் பகுதி மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் எனவும் தனுஷ் அட்வைஸ் கொடுக்கிறார். இந்த ஒருங்கிணைப்பின் பின்னணியில் எல்லாம் தனுஷின் அரசியல் ஆர்வமே உள்ளது" என்றனர்
இதுகுறித்துப் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், 'இன்றைய சூழலில், முதல்வர் விஜய்யை எதிர்கொள்ளும் நிலையில் திமுக அகிமுக ஆகிய கட்சிகள் இல்லை. அதனால், அரசியல் ஆர்வம் உள்ள தனுஷை பாஜக தயார் செய்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, அவரின் ரசிகர்களை வளைக்க தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்திற்கும். கேப்டன் மில்லர் படத்திற்கும் இரு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன
மேலும், த.வெ.க. ஆட்சி அமைந்தபிறகு விஜய் ரசிகர்கள், ரஜினியைத் தொடர்ந்து சீண்டுவதால், அவரின் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அவர்களது ஆதரவும் தனுஷுக்கு கிடைக்கும். அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாத நிலையில், தனுஷின் அந்த முயற்சியை ரஜினியும் ஆதரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கடந்த 2015 அமித் ஷா முன்னிளையில் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவர் தற்சமயம் ஆக்கள் அரசியலில் இல்லை என்றாலும் தனுஷை பாஜக பயன்படுத்திக்கொள்ள அவர் தரப்பிலும் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது சமீபத்தில் கஸ்தூரி ராஜாவிடம் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ, பேரன்களோகூட அரசியலுக்கு வரலாம் என்று பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்திற்காக கொடி அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. இதுபற்றி ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவாவிடம் இந்த கொடி எப்போது கோட்டைக்கு போகும்" என்று திருபர் ஒருவர் கேட்க எது எப்ப நடக்குமோ, அது அப்ப நடக்கும் என்று அவர் பதில் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தனுஷை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தரப்பும் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், எப்படி விஜய் ரசிகர்கள் முதன்முதலாக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக களம் கண்டார்களோ, அதே பாணியில் வரும் உள்ளாட்சி தேர்தலிலேயே தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் களமிறங்க தயாராகி வருகின்றனர். இதற்கான முன்னெடுப்புகள்
அனைத்தும் தனுஷின் இந்த வருட பிறந்தநாள் (ஜூலை 28) கொண்டாட்டங்களில் இருந்து தொடங்கிவிட்டன. இதையொட்டி, கடந்த ஜூலை 26ம் தேதி சென்னை அருகே ஒரு தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான நிகழ்வில் மாநிலம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்" என்று சொல்லி முடித்தனர்.
தனுஷ் அரசியல் பிரவேசம் குறித்து மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமுவிடம் பேசியபோது. "தனுஷ் படங்களில் புதுப்பேட்டை தொடங்கி கொடி அசுரன், கர்ணன் வரை பல படங்கள் அரசியல் பேசியுள்ளன. தமிழக அரசியலில் அவரையும் அவரின் ரசிகர்களையும் பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ள அதிக காரணங்கள் உள்ளன. தீவிர சிவ பக்தரான தனுஷ் அடிக்கடி திருவண்ணாமலை சென்று வணங்கக்கூடியவர் இந்து மதத்தின்மீது தீவிர பிடிப்புள்ளவர், அதை பொது இடங்களிலும், திரைப்படங்களிலும் தயங்காமல் வெனிப்படுத்தக்கூடியவர்.
அயோத்தியில் நடந்த ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ்த் திரையுலகில் இருந்து இரண்டு நடிகர்கள் நான் கலந்துகொண்டனர். ஒருவர் ரஜினி, இன்னொருவர் தனுஷ். இந்த அதி தீவிர ஆன்மிக நாட்டத்தையும். அரசியலையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அதோடு பிரதமர் மோடிக்கு சமூகவலைதனத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தபோது, 'ஓம் நமசிவாய' என்று தனுஷ் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. தமிழக தேர்தல் களத்தில் ரஜினியை பயன்படுத்த பா ஜ.க. எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அதேசமயம், பா.ஜ.கவில் இணைந்து தனுஷ் தனது அரசியலை தொடங்கமாட்டார் என்றாலும், அவரது அரசியல் ஆர்வத்தை கச்சிதமாக பாஜக பயன்படுத்திக்கொள்ளும் என்பதே தற்போதைய அரசியல் சூழஎன்றார்
கொடி பறக்குமா?
What's Your Reaction?

