முன்னாள் பிரதமர் சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது
எம்.ஜி.ஆர், அன்னை தெரசா உள்ளிட்ட 48 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தையும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் எமெர்ஜென்சி காலத்தில் விவசாயத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஆற்றிய அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த மக்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியதாகவும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருது குறித்து பார்ப்போம்: பாரத ரத்னா விருது என்பது இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. 1954-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நிறம், தொழில் மற்றும் பாலின வேறுபாடு ஏதும் இன்றி அனைவருக்கும் உரியது. மிகச்சிறந்த சேவையாற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. கலை, அறிவியல், இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
1955ஆம் ஆண்டு சட்டப்படி, அமரர்களுக்கும் இவ்விருது வழங்க வழிவகை செய்யப்பட்டது. இதுவரையில் எம்.ஜி.ஆர், அன்னை தெரசா உள்ளிட்ட 48 பேருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?