திமுக தீயசக்தி - தவெக தூய சக்தி : ஈரோட்டில் ஸ்டாலின் மீது விஜய் அட்டாக்

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், திமுக தீய சக்தி என்றும், தவெக தூய சக்தி எனவும் கடுமையாக சாடி பேசினார். 

திமுக தீயசக்தி - தவெக தூய சக்தி : ஈரோட்டில் ஸ்டாலின் மீது  விஜய் அட்டாக்
Vijay attacks Stalin in Erode

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளும் தி.மு.க அரசை நேரடியாக விமர்சித்துப் பேசினார். தி.மு.க.வின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், தனது அரசியல் இலக்குகள் மற்றும் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

'உங்களை நம்பி தான் வந்திருக்கிறேன்'

“நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வைத்து தான் தொடங்குவார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு. விவசாயத்துக்கு கவசமாக உள்ளது காளிங்கராயன் அணை. உங்களை நம்பி தான் வந்திருக்கிறேன், வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன். சூழ்ச்சிக்காரர்களுக்கு தெரியாது, இது 30 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கின்ற உறவு. பெற்ற தாய் தரும் தைரியத்தை நண்பா, நண்பிகள், தோழர்கள், தோழிகள் தருகிறார்கள்.

'களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க நேரமில்லை'

பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்காதீர்கள். நமது அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக (தொண்டர்கள் சத்தம்). தவெக ஒரு பொருட்டில்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?. கொள்ளையடித்து வைத்துள்ள பணம்தான் உங்களுக்குத் துணை; ஆனால் எனக்கு இந்த மாஸ் தான் துணை. களத்தில் உள்ள எதிரிகளை மட்டும் தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க நேரமில்லை.

'நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா...'

எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்

24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா... தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி; தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி" என்று அவர் தெரிவித்தார்.

செங்கோல் கொடுத்த செங்கோட்டையன் 

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தவெக விஜய் செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கினார். பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், புரட்சி தளபதி என பட்டத்தையும் விஜய் சூட்டினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow