திமுகவிடம் இவ்வளவு மோசமா விலை போயிட்டாரே... கமல்ஹாசனை சீண்டிய நடிகை கஸ்தூரி...
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் திமுகவுடன் மேற்கொண்டுள்ள தொகுதி பங்கீடு குறித்து நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க., கூட்டணியில் மக்களவை தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வரும் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுகவிடம் கமல்ஹாசன் விலை போய்விட்டார் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என்றும் ஆனால் இத்தனை மோசமாக விலை போய்விட்டாரே என்றும் வெறும் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட்டுக்காக இப்படி கேவலமான முறையில் விலை போய்விட்டார் என்றும் நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். மாற்றத்தை தேடி நம்பிக்கையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வந்தவர்களுக்கு ஒரு பேரிடியாகவே கமல்ஹாசனின் இந்த முடிவு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?