மனைவியை வெட்டிவிட்டு கணவர் தப்பியோட்டம் !

கோரம்பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அமராவதி என்ற பெண்னை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் குணா தப்பி ஓட்டம். உயிருக்கு ஆபத்தான நிலையில் அமராவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jan 30, 2024 - 17:10
மனைவியை வெட்டிவிட்டு கணவர் தப்பியோட்டம் !

கோரம்பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அமராவதி என்ற பெண்னை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் குணா தப்பி ஓட்டம். உயிருக்கு ஆபத்தான நிலையில் அமராவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி  புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா அவரது மனைவி அமராவதி  மகளிர் குழுவில் சேர்ந்து இருப்பதால் பல்வேறு இடங்களுக்கு செல்வதை குணா தொடர்ச்சியாக கண்டித்துள்ளார். மேலும் இதன் காரணமாக இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் அமராவதி  இன்று கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அமராவதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது மகளிர் குழு தோழியான கல்பனா என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுள்ளார்.

இந்நிலையில் கோரம்பள்ளத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள  புரோட்டா கடையில் அமராவதி உடன் வந்த கல்பனா புரோட்டா வாங்குவதற்காக வண்டியை  நிறுத்த சொல்லி உள்ளார். இதைத்தொடர்ந்து அமராவதி கடை முன்பு வண்டியை நிறுத்தி நின்று கொண்டிருக்கும் போது அவரது கணவர் குணா அங்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அமராவதி கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார்.  இதில் ரத்த வெள்ளத்தில் அமராவதி அந்த இடத்திலேயே கீழே சரிந்துள்ளார்.

மேலும் இதனைத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அமராவதியை சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர்  108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அமராவதிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கணவன் குணாவை புதுக்கோட்டை காவல் துறையினர் வலை வீசி  தேடி வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் கலந்து கொண்டு விட்டு சென்ற மகளிர் குழுவை சேர்ந்த பெண் அமராவதிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow