தேர்தல் பத்திரம் வழக்கு; உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் கொண்ட 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது

Feb 15, 2024 - 07:28
Feb 15, 2024 - 07:29
தேர்தல் பத்திரம் வழக்கு; உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தேர்தல் பத்திரம் திட்டம் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று  தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும் என்றும்  இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கில் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட நிதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் கொண்ட 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow