ஐபிஎஸ் vs ஐஆர்எஸ்: விஜய் குறித்த விமர்சனம்: அருண்ராஜ் அண்ணாமலை மோதல்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதற்கு, தவெக கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் அனல் வீச தொடங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 16ம் தேதி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்: விஜய் பேசிய வசனமான, ‘கம்முன்னு இருக்க வேண்டிய கம்முன்னு இருக்கணும். கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு ஒருக்கணும்’ என்பதை சுட்டிக்காட்டி அரசியலில் அப்படியெல்லாம் இருக்க முடியாது. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்.
நாட்டில் இவ்வளவு பிரச்னை நடக்கும்போது நான் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி அதிகாரத்தை வழங்குவார்கள். சரி இல்லை தவறு என்பதை விஜய் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதை செய்தாலே அவர் நல்ல அரசியல்வாதியாக வருவார். புதுச்சேரி மக்களுக்காக பேசிய விஜய், ஏன் திருப்பரங்குன்றம் மக்களுக்காக பேசவில்லை?. நியாயமான விஷயங்களுக்கு ஒன்றாக இருப்போம்” என தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தவெக கொள்கை பரப்பு மாநில பொதுச்செயலாளர் அருண்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்:"விஜய் அமைதியாக இருப்பதை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆனால், விஜய் கூறிய டயலாக் அண்ணாமலைக்கு நன்றாக பொருந்தும். அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். எங்கள் கட்சி தலைவர் எப்போ எதை பேச வேண்டுமென்று அவர் சொல்ல தேவையில்லை. தலைவருக்கு தெரியும்” என்று பதிலடி கொடுத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை: பிரதமர் மோடிக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றியுள்ள விசுவாசமான நாய். சினிமா நடிகர்களுக்காக ஆதரவு தெரிவிக்க அரசு பதவியை துறந்து விட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. உன்னதமான கோட்பாட்டுக்கு வந்திருக்கிறேன். வருகின்ற காலத்திலும் பல பிரச்னைகளை சந்திக்கப் போகிறேன். ஆனால் மக்களுக்காக சந்திக்கும் அதை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட பதவியே எனக்கு தேவையில்லை” என கூறியுள்ளார்.
ஐபிஎஸ், ஐஆர்எஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதல், தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.
What's Your Reaction?

