திருப்பதியில் மொட்டை அடிக்க 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பக்தர்கள் மொட்டை அடிக்க தேவைக்காக ரூ.1.20 கோடி மதிப்​புள்ள பிளேடு​களை ஹைத​ரா​பாத்தைச் சேர்ந்த தொழில​திபர் பி.ஸ்ரீதர் நன்​கொடை​யாக வழங்​கி​னார்.

திருப்பதியில் மொட்டை அடிக்க 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை
Blades worth Rs 1 crore donated for shaving in Tirupati

திருப்பதியில் தினசரி மொட்டை அடிப்பவர்களின் எண்ணிக்கை மாறுபடும், மொட்டை அடிக்கும் பணியில் 1,158  ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இது 20,000 முதல் 40,000 வரை இருக்கலாம், புரட்டாசி போன்ற மாதங்களில் 50,000-க்கும் மேல் செல்கிறது; 

சமீபத்திய தகவலின்படி, ஒரே நாளில் 49,088 பேர் மொட்டை அடித்ததே அதிகபட்சம் என்றும், சராசரியாக ஒரு நாளைக்கு 1 டன் தலைமுடி காணிக்கையாக வருகிறது என்றும் கூறப்படுகிறது. அதிகபட்ச எண்ணிக்கை: புரட்டாசி மாதத்தின் ஒரு சனிக்கிழமை அன்று மட்டும் 49,088 பக்தர்கள் மொட்டை அடித்துள்ளனர்.

ஹைத​ரா​பாத்தை சேர்ந்த வெர்ட்​டிகல் குளோபல் எனும் நிறு​வனத்​தின் இயக்​குந​ரான பி.ஸ்ரீதர் நேற்று திரு​மலை​யில் தனது குடும்​பத்​தா​ருடன் இணைந்து அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடுவை சந்​தித்​தார். அப்​போது ரூ.1.20 கோடி மதிப்​புள்ள பிளேடு​களை அவரிடம் ஒப்​படைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பி.ஸ்ரீதர் கூறுகையில், “திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தலை​முடி காணிக்கை செலுத்​துகின்​றனர். இதில் ஒரு​வருக்கு பாதி பிளேடு வீதம் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதற்கு திருப்​பதி தேவஸ்​தானம் ஆண்​டுக்கு ரூ.1.16 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​கிறது.

இதனால் எனது நிறு​வனத்​தில் தயாரிக்​கப்​பட்ட பாதி பிளேடு​களை திருப்​பதி தேவஸ்​தானத்​திற்கு நன்​கொடை​யாக வழங்கி உள்​ளேன். உலகிலேயே எனது நிறு​வனம் தான் முதன்​முதலில் பாதி பிளேடு​களை தயாரித்து விற்​பனை செய்​கிறது.

பாதி பிளேடு​கள் விற்பனை அமெரிக்​கா, ஐரோப்பா உட்பட 52 நாடு​களில் புகழ்​பெற்று விளங்​கு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow