இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: டெல், அவிவ் நகரங்கள் மீது கொத்து குண்டுகள் வீச்சு
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதலை தொடங்கியுள்ளது. டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொத்து குண்டுகளை வீசி ஈரான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையே 10-வது நாளாக மேலாக போர்பதற்றம் நீடித்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படை இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வான், தரைவழியாக லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேலின் ராணுவ தலைமையகமான டெல் அவிவ் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள், பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. வான் வழி தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் ராணுவம் சார்பில் அயர்ன் டோம் மற்றும் சி டோம் பாதுகாப்பு கவச அமைப்புகள் நிறுவியுள்ளன.
ஆனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ராணுவம், தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி வருகிறது. ஈரானின் ஏவுகணை சுமார் 23,000 அடி உயரத்தில் வெடித்து 20 சிறிய குண்டுகளாக பிரிகிறது. இந்த கொத்து குண்டுகள் சுமார் 8 கி.மீ. பரப்பளவு வரை சிதறி விழுகின்றன. இவற்றை நடுவானில் இடைமறித்து அழிப்பது கடினமாக உள்ளது. இதனால் இஸ்ரேலில் பல நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
டெல் அவிவ் நகரில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட பொது பதுங்கு அரங்குகள் உள்ளன. டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களில் பூமிக்கு அடியில் பிரம்மாண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக போர்க் காலங்களில் இஸ்ரேலில் உயிரிழப்பு குறைவாக உள்ளது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

