கேரவனில் தவறாக நடக்க முயன்ற பிரபாஸ்? பளார் விட்ட பூஜா ஹெக்டே
கேரவனில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் பிரபாஸ் கன்னத்தில் பளார் விட்டதாக பூஜா ஹெக்டே கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை பூஜா ஹெக்டே கூறியாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியில், “சில ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய பான் இந்திய திரைப்படத்தில் நடித்தேன். அந்த படப்படிப்பில் அப்படத்தின் கதாநாயகன் என் அனுமதியில்லாமல் கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
நுழைந்தது மட்டுமில்லாமல், என்னைத் தவறான எண்ணத்தில் தொட முயன்றார். அப்போது நான் செய்வது என தெரியாமல் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகரின் செயலை தடுக்க நினைத்த, நான் அவரின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகர் என்னுடன் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை. சினிமா படப்பிடிப்பின்போது நடிகைகள் இப்படியான கேரவன் அத்துமீறல்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர்.” என பூஜா ஹெக்டே வருத்தத்துடன் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.
பூஜா ஹெக்டே குறிப்பிட்ட நடிகர் பிரபாஸ் என்றும் ராதே ஷ்யாம் படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்ததாக, பலரும் குறிப்பிட்டு வரும் வேளையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பூஜா ஹெக்டே இதுவரை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

