தஞ்சையில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் நகை,பணம் கொள்ளை

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடையத்தை சேகரித்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Dec 21, 2023 - 12:03
Dec 21, 2023 - 12:32
தஞ்சையில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் நகை,பணம் கொள்ளை

தஞ்சையில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இவர் சிங்கப்பூரில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கீதா (வயது 43). இவர் தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.

வழக்கம் போல கீதா தனது மகளுடன் காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். கீதாவின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை 3.30 மணிக்கு வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து அவர், தனது தாய் கீதாவுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து கீதா, தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர் பின்பு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடையத்தை சேகரித்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow