கள்ளச்சாராய விவகாரம்: வேலூர் மாவட்டத்தில் அதிரடி; தகவல் அளிக்க பிரத்யேக எண்
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பவர்கள் குறித்த தகவலை வாட்ஸ்அப் எண்ணினை அறிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 37 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வர்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”சட்டவிரோதமாக விற்கப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மாவட்டம் முழுவதும் தினந்தோறும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டும், எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், மேல்நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், கடந்த 27.05.2023- தேதி சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 6379958321 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணாணது முழுக்க முழுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதாகும்.
மேலும் அதனைத் தொடர்ந்து வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வாட்ஸ்அப் மூலம் தகவல் அளிக்க 8838608868 என்ற எண்ணாணது வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் அய்வாளர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டிலும் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வாட்ஸ்அப் மூலம் தகவல் அளிக்க *9087756223 என்ற எண்ணாணது குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் அய்வாளர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகிறது.
மேற்கண்ட எண்களுக்கு அளிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களின் நேரடி கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்பதை தெரிவித்து கொல்லப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?