மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ?
அடுத்த பொங்கல் பண்டிகைக்கு நடிகர் அஜித்குமார் நடித்த மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விஜயின் கடைசி படமான ஜனநாயகனுடன் போட்டி ஏற்படுத்த இந்த திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக வலைதளங்களில் தொடர் பதிவிட்டு வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில் தி கிங்மேக்கர் என்று பதிவிட்டுள்ளார். மங்காத்தா படத்தில் ஒரு வசனத்தில் கிங்மேக்கர் வார்த்தை இடம்பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் கிங் மேக்கர் பதிவு, ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. இதனையடுத்து, மங்காத்தா படத்தின் மறுவெளியீடு குறித்துதான் வெங்கட் பிரபு சிக்னல் அளித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதனிடையே, விஜய் நடித்து ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 9-ம்தேதி வெளியாக உள்ளது.இந்த படத்திற்கு போட்டியாக அஜித்குமார் நடித்த மாங்காத்தா படத்தை ரீ-ரிலிஸ் செய்வதுகுறித்து பட தயாரிப்பு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
அப்படி படம் வெளியிடப்பட்டால், ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகை பெரும் கொண்டாட்டமாக அமையும். ஆனால், மங்காத்தா மறுவெளியீடு குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரையில் எதுவும் பெறப்படவில்லை.
What's Your Reaction?

