தண்ணீர் தராத கர்நாடக அரசுடன் முதலமைச்சர் கூட்டு! சீமான் விமர்சனம்

திண்டுக்கல்லில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான், சமூக நீதி பேசும் எத்தனை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு சீட் வழக்கி உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

Apr 2, 2024 - 05:45
Apr 2, 2024 - 11:10
தண்ணீர் தராத கர்நாடக அரசுடன் முதலமைச்சர் கூட்டு! சீமான் விமர்சனம்

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் கயிலை ராஜனை ஆதரித்து ஆயக்குடி பகுதியில்  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், காவிரியில் தண்ணீர் தரமாட்டேன், மேகதாதுவில் அணையை கட்டியே தீருவேன் என்று சொல்லும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமாருக்கு ஆதரவாக கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தேர்தலில் ஜெயித்தாலும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை சித்தராமையா தரமாட்டார் என்பதை தெரிந்தும் மு.க.ஸ்டாலின் ஓட்டு கேட்டது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பினார். 

திமுக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை மதிப்பதில்லை, 22 இடங்களில் போட்டியிடும் திமுக, எத்தனை கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு சீட் கொடுத்துள்ளது. நவாஸ் கனிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் சீட் கொடுத்து ஒதுக்கிவிடுவது, காரணம் திமுக அங்கு நின்றால் தோற்றுப்போகும் என்பதால் அந்த தொகுதியை இவ்வாறு கழித்துக்கட்டி விடுவது. திமுகவில் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு கொடுத்த இடங்கள் எத்தனை? ஒன்றும் கொடுப்பது இல்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை இஸ்லாமியர்களுக்கு 5 இடங்களைக் கொடுத்தோம். இம்முறை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு தலா 2 இடங்களை அளித்துள்ளோம். அரசியலில் சிறுகட்சிகளானா நாங்களே சமூகநீதி அடிப்படையில் இப்படி பிரித்துக் கொடுத்திருக்கும்போது, இவ்வளவு பெரிய கட்சியான திமுக ஏன் அதை செய்யவில்லை? என்று சீமான் கேள்வி எழுப்பினார். மீண்டும் திமுகவுக்கே வாக்களித்தால் இறைதூதரே மீண்டும் வந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்று அவர் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow