திருவிடைமருதூர் கொலையை சிபிஐ விசாரிக்க கோரி பாமக மனு
இளைஞரை இழந்த வாடும் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை
திருவிடைமருதூர் அருகே போலி சித்த மருத்துவரால் இளைஞரை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பாமக சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் அசோக்ராஜ் (27).சென்னையில் டிரைவராக பணிபுரிந்த இவர் திருமணமாகாத நிலையில் தனது பாட்டி பத்மினி (65) வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி சிதம்பரம் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்ற அசோக்ராஜ் வீடு திரும்பவில்லை.இதனால் அசோக்ராஜின் பாட்டி பத்மினி கடந்த 15ம் தேதி சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அசோக்ராஜ் செல்போனை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது.
பின்னர் அசோக்ராஜ் சென்று வந்த இடங்களில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில் அவர் மோட்டார் சைக்கிளை சோழபுரம் ராஜா சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு செயின், மோதிரம் அணிந்தபடி கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சியில் உள்ள கீழ தெருவிற்கு செல்வது தெரியவந்தது.
அங்கு அசோக்ராஜிற்கு நெருக்கத்தில் இருந்த தங்கையன் மகன் கேசவமூர்த்தி (47) என்பவர் வசித்து வருகிறார்.இவர் கட்டிட மேஸ்திரியாகவும் இருந்து, சித்த மருத்துவம் கற்றதாக கூறி கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் நாட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கேசவமூர்த்தியிடம் கிடக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கேசவமூர்த்தியை கடந்த 19ம் தேதி போலீசார் கைது செய்த நிலையில், அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜ் உடலை தடயவியல் ஆய்வுத்துறையினர் உதவி இயக்குனர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து உடலை அசோக்ராஜ் பெற்றோர்களிடம் ஒப்படைத்து அடக்கம் செய்தனர்.பின்னர் திங்கட்கிழமை காலை பாபநாசம் நீதிமன்றத்தில் கேசவமூர்த்தி ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், இளைஞரை இழந்த குடும்பத்திற்கு நஷ்டஈடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் கோரி பாமக சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தார்.
What's Your Reaction?