கஞ்சா விற்பனை செய்த நபரை பிடிக்க சென்ற போலீஸ்: நாயை வைத்து பயமுறுத்தியதால் பரபரப்பு
சென்னை அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடிக்க சென்ற போலீசாரை நாய் வைத்து பயமுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை ஜரூராக நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. இதையடுத்து அசோக் நகர் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா புகைத்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அசோக் நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் சிறுவன் விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கண்காணித்து அந்த சிறுவனை கைது செய்து விசாரித்த போது அவரது தந்தை ரமேஷ் மூலமாக தான் கஞ்சா சப்ளை நடந்தது தெரிய வந்தது. ரமேஷ் மீது ஏற்கனவே போதைப்பொருள் தடுப்ப சட்டம் உள்ளிட்ட 15 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்ற போது அவரது மாற்றுத்திறனாளி மனைவி நாய் வைத்து பயமுற்று வீட்ற்குள் நுழைய விடாமல் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணைக்காக சென்ற போது தான் இது போல நடந்ததாக கூறப்படுகிறது.
தலைமறைவான ரமேஷை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பிறகு ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர். ரமேஷ் தனது வீட்டிலேயே வைத்து கஞ்சா பொட்டலங்கள் போட்டு மகன் மூலமாக சப்ளை செய்தது தெரிய வந்தது. கைதான ரமேஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது மகனை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
What's Your Reaction?