வீட்டை பூட்ட மறந்த ஐடி ஊழியர்.. சென்னையில் பதம்பார்த்து சென்ற கொள்ளையர்கள்
சென்னை ஓட்டேரியில் வீட்டை பூட்ட மறந்து தூங்கிய ஐடி ஊழியரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஓட்டேரி எட்வர்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். மேலும் நவநீதகிருஷ்ணன் தனது தாய், தந்தை, தங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்ற நவநீதகிருஷ்ணன் கதவை பூட்டாமல் மறந்தவாறு அப்படியே வந்து வீட்டினுள் தூங்கி உள்ளார்.
இந்த நிலையில் நள்ளரவில் அவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 2 செல்போன், உயர் ரக வாட்ச், நான் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வழக்கம் போல காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த நவநீதகிருஷ்ணன் 2 செல்போன், வாட்ச், நான் ஏடிஎம் கார்டு கொள்ளைபோனதால் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து செம்பியம் காவல் நிலையத்தில் இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
What's Your Reaction?






