கட்டிட தொழிலாளி மீது பெட்ரோல் குண்டுவீச்சு... 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது... மதுரையில் பரபரப்பு..

மதுரை அருகே கட்டிடத் தொழிலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.

May 14, 2024 - 20:14
கட்டிட தொழிலாளி மீது பெட்ரோல் குண்டுவீச்சு... 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது... மதுரையில் பரபரப்பு..

மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் சரக எல்லைக்குட்பட்ட தென்பழஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமுருகன்(27). கட்டிட தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று விட்டு நேற்றிரவு தனது வீட்டின் முன்பக்கத்தில் படுத்து உறங்கி உள்ளார்.

அப்போது கண்ணன் என்பவருடன் திடீர் நகரை சேர்ந்த 3 சிறுவர்கள்  ஒன்றாக மது அருந்திய நிலையில், போதையில் முத்துமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். 

தொடர்ந்து முத்து முருகன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆசிரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை நடத்திய போலீசார் கண்ணன் என்பவரை கைது செய்ததுடன் மேலும் மூவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது  மூவரும் திடீர் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முத்து முருகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், இதன் காரணமாகவே பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் அம்பலமானது. 

இதையடுத்து பெட்ரோல் வீச்சில் தொடர்புடைய மூன்று சிறார் உட்பட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow