30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது-அமைச்சர் சக்கரபாணி

1000 கோடி ரூபாய் மதிப்பு- தண்ணீர் பிரச்சனையே இருக்காது

Feb 12, 2024 - 09:04
Feb 12, 2024 - 11:16
30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது-அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம், பழனியைச் சுற்றியுள்ள ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அடுத்து 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவுக்கு ரூ.1,000 கோடியில் திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 12 ஊராட்சிகளில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய ரேஷன் கடை திறப்பு விழா உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரூ.17.56 கோடி அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொல்லம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மானூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் பள்ளி சுற்று சுவர் அமைத்தல் தாழையூத்து ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நியாய விலை கட்டிடம் திறப்பு மற்றும் தானியங்கி கிடங்கு கட்டுதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயணியர் நிழல் கூரை திறப்பு விழா என பல்வேறு 12 ஊராட்சிகளில் 18 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். 

பின்னர் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன் சத்திரம், பழனி சுற்றியுள்ள ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பில் அடுத்து 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவிற்கு திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow