பொழிமுகப்பகுதியில் தவறிவிழுந்து மீனவருக்கு நேர்ந்த சோகம்-போலீசார் விசாரணை

இது சம்பந்தமாக அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jan 5, 2024 - 15:05
பொழிமுகப்பகுதியில் தவறிவிழுந்து மீனவருக்கு நேர்ந்த சோகம்-போலீசார் விசாரணை

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க செல்ல முயன்ற மீனவர் பொழிமுகப்பகுதியில் தவறிவிழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரதீஷ்.மீனவரான இவருக்கு சொந்தமான பைபர் படகை தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பொழிமுகப்பகுதியில் நிறுத்திவைத்திருந்து தொழிலுக்கு செல்வது வழக்கம்.அதன்படி பிரதீஷ் தனது பைபர் படகை எடுத்துக்கொண்டு தொழிலுக்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக பொழிமுகப்பகுதியில் தவறிவிழுந்து மாயமாகி உள்ளார்.

உடன் இருந்தவர் கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் ஓடி வந்து தண்ணீரில் குதித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.பல மணி நேரம் தேடிய பின் பிரதீஷின் உடல் மீட்கப்பட்டு தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது சம்பந்தமாக அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow