ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்ற விஜய் திடீர் முடிவு ? டிச 27-ம் தேதி இசைவெளியிட்டு விழா புது டைட்டில் அறிவிப்பு
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்றி புதிய டைட்டில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
'ஜனநாயகன்' படத்துடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படுவதால், இந்நிகழ்வில் விஜய் பேசப்போவதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் 'ஜனநாயகன்' ஆடியோ லான்சிற்காக படக்குழு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது த.வெ.க என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தான் அரசியலில் ஈடுபட்டு வருவதால் இனி படங்களில் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதைக்கேட்ட திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாமே என்று கருத்து தெரிவித்தனர். இதனால் தான் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எப்பவும் போல் சென்னையில் இல்லாமல் மலேசியாவில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால், இன்னும் பெயர் வீரியமாக இருந்தால் நன்றாக இருக்கும் என தவெக மூத்த நிர்வாகிகள் நினைக்கிறார்கள். சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனும் இதே கருத்த விஜயிடம் வலியுறுத்தி உள்ளார்.
எம்ஜிஆர் நடித்த படத்தின் பெயரை ஜனநாயகன் படத்திற்கு சூட்ட விஜய் முடிவு செய்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. இன்று ஜனநாயகன் படத்தின் 2-வது பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

