Aavin : ஆவின் ஐஸ்கிரீம் விலை ஏற்றம் இன்று முதல் அமல்!! எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொரு ஐஸ்கிரீமின் விலையும் ரூ. 2 முதல் ரூ.5 வரை உயர்கிறது.

Aavin : ஆவின் ஐஸ்கிரீம் விலை ஏற்றம் இன்று முதல் அமல்!! எவ்வளவு தெரியுமா?

பால் வகைகளை விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம், 4 வகை ஐஸ்கிரிம் பொருட்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, பால் பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறது. பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்களை ஆவின் விற்பனை செய்து வருகிறது. 

இவற்றில் பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விற்பனை சீராக நடைபெற்று வரும் நிலையில், கோடைக் காலங்களில் மோர், ஐஸ்கிரீம், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில், ஆவின் பாலகங்களில் விற்கப்படும் ஐஸ்கிரீம் விலையை திடீரென உயத்தி, ஆவின் நிறுவனம் அறிவித்தது. 

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டை விட இவ்வாண்டு கோடைக் காலத்தில் பால் பொருட்களின் விற்பனை 20% கூடுதல் விற்பனையை எட்ட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. ஆனாலும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் இடுபொருட்களின் விலை சற்று உயர்வாக உள்ளதால் 4 வகையான ஐஸ்கிரீம்களின் விலை உயர்த்தப்படுவதாகக் கூறியுள்ளது. 

அதன்படி, ஒவ்வொரு ஐஸ்கிரீமின் விலையும் ரூ. 2 முதல் ரூ.5 வரை உயர்கிறது. சாக்கோபார் ஐஸ்கிரீம் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும், வெண்ணிலா கப் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆகவும், வெண்ணிலா கோன் ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும், சாக்லேட் கோன் ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (மார்ச் 03) முதல் அமலுக்கு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow