நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை..!
நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிப்பதற்காக, அரசு பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கோபியிடம் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. திரைப்படத் தயாரிப்புக்காக பெற்ற அந்தத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விமல் வழங்கிய காசோலை பணமின்றி திரும்பியதாகவும், இதன் காரணமாக அரசு பிலிம்ஸ் கோபி சார்பில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களை பரிசீலித்தது. விசாரணையின் முடிவில், அரசு பிலிம்ஸ் கோபிக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை நடிகர் விமல் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்புக்காக பெற்ற கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான இந்த வழக்கு, நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக நடிகர் விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?