மழலைகள் முதல் மனம் பாதித்த பெண் வரை....என்னதான் நடக்கிறது சென்னை சுற்றுவட்டராத்தில்?
செ ன்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் குறிப்பிட்ட 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகளை பாலியல் பாதிப்புக்குள்ளாக்கிய 12 சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மழலைகள் தொடங்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் வரை இடம் பெற்றிருப்பதுதான் சோகம்!
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் பேசினார். "தமிழகத்தில் 16 சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி விடுதிக்கு அவத்துச் செறு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மனோஜ் மற்றும் ராஜா ஆகிய இருவர் கைதாகியுள்ளனர். கோயம்பேட்டில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் நேபாளத்தைச் சேர்ந்த பிஜயதேவ்யா, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறான்.
இதையெல்லாம்விட கொடுமையாக மாங்காடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான் அடுக்குமாடி குடியிருப்பு செக்யூரிட்டி தனவேல் போலீஸ் விசாரணையில் பலநாள் திட்டமிட்டு இந்த கொடுமையை அவன் அரங்கேற்றியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான் குன்றத்தூரிலோ, நடந்துசென்ற பெண்ணிடம் வாகனத்தில் வந்த பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வது தொடர்கதையாகியுள்ளது. கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில், குறிப்பிட்ட அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம், திருபாச்சூர் கோட்டை காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நந்தகுமார், அப்பகுதி 7ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோவில் கைதாகியுள்ளான். பூந்தமல்லி, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சரவணன், தனக்கு நன்கு அறிமுகமான கூலித்தொழிலாளி ஒருவரின் 7 வயது மகனை, சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோவில் கைதாகியுள்ளான்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த பீகாரைச் சேர்ந்த ஜெய்சாந்த் என்ற தொழிலாளி, அப்பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட, பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்திருக்கின்றனர். அம்பத்தூரைச் சேர்ந்த
மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு தப்பியுள்ளான். சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் பின்னர் அவன் கைது செய்யப்பட்டுள்ளான். பெரம்பூர் அகரம் பகுதியில், 12ம் வகுப்பு மாணவியிடம் செல்போன் எண் கேட்டு தொந்தரவு செய்த முகேஷ் என்பவன் போக்சோவில் கைதாகியுள்ளான் இப்படியாக. 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் இல்லை. ஆனால், துணிந்து இந்த கொடுமைகளை செய்ய இவர் களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது. இதேநிலை நீடித்தால் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். அவற்றைத் தடுக்க. காவல்துறை இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தொடர் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முதல்வர் விஜய் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.
பெண் ஆதரவாளர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய் பெண்களைக் காப்பாரா?
What's Your Reaction?













