ஆர்த்தி படுகொலை... கண்ணீர் மல்க நடுக்கடலில் பேனர் வைத்து மாணவர்கள் போராட்டம்...

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலைக்கு நீதிகேட்டு, மாணவர்கள் கடலில் பேனர் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Mar 8, 2024 - 18:23
Mar 8, 2024 - 19:09
ஆர்த்தி படுகொலை... கண்ணீர் மல்க நடுக்கடலில் பேனர் வைத்து மாணவர்கள் போராட்டம்...

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலைக்கு நீதிகேட்டு, மாணவர்கள் கடலில் பேனர் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா போதையால், 9 வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சோக சம்பவத்தின் ரணம் இன்னும் ஆறாமல் உள்ளது. 

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு அதிகபட்ச தண்டனை என்பதே மக்களின் கருத்து உள்ளது. இதனை வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும், மாணவர்களும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சிறுமிக்கு நீதி கேட்டு, படகில் சென்ற மாணவர்கள் நடுக்கடலில் பேனர்கள் ஏந்திய படி போராட்டம் நடத்தினர். 

காந்தி சிலை அருகே போராட்டம் நடத்திய மாணவிகள், குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றனர்.  போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த காவல்துறையினர், அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow