“பிச்சைக்காரன்”Movie Recreation? பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ...வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Sep 15, 2026 - 09:11
“பிச்சைக்காரன்”Movie Recreation? பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ...வைரலாகும் வீடியோ!

காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பராக் ஷா, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொத்து மதிப்பு ரூ.3,383 கோடிக்கும் மேல் எனப் படிவத்தில் குறிப்பிட்டு, மாநிலத்தின் பணக்கார வேட்பாளராகக் களம் கண்டவர்.

இந்நிலையில் இவர் ஜெயின் மதப் புனித மாதத்தையொட்டி,தனது ஆன்மீகக் குருவான நம்ரமுனி என்பவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே பராக் ஷா பிச்சைக் கோளம் பூண முடிவு செய்துள்ளார். அதன் படி நேற்று (செப்டம்பர் 14) தனது பாதுகாவலர்கள், உதவியாளர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக அழுக்காக மேக்கப் போட்டு பிச்சைக்காரர் வேடமிட்டு மும்பை தெருக்களில் சுற்றியுள்ளார்.

அனுபவம்

பிச்சைக்காரர் வேடமிட்டு தெருக்களில் சுற்றி நிலை குறித்து பின்னர் பேசிய பாரக் ஷா "நமக்குக் கிடைக்கும் அனைத்து மரியாதைகளும் நம் பதவி மற்றும் அந்தஸ்துக்காக மட்டுமே கிடைக்கிறது.

பிச்சைக்காரர் வேடத்தில் சென்றபோது, வழக்கமாக என்னைச் சந்திக்க வரிசையில் நிற்கும் அதே மனிதர்கள் என்னை விட உயர்ந்தவர்களாக உணர்ந்தனர். இதுவே வாழ்க்கையின் கசப்பான உண்மை." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பிச்சைக்காரராக இருந்தபோது மும்பை மக்கள் தனக்குச் செய்த உதவிகளைப் பராக் ஷா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார.

ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார். ஒரு ஏழை சமோசா வியாபாரி, அவரிடம் பணம் இல்லை என்று கூறியபோதும், சிறு சலிப்பும் இன்றி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.

"மும்பை நகரம் என்பது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நகரம் என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது" என பராக் ஷா உணர்ச்சிபொங்க தெரிவித்தார். பிச்சை எடுத்து சாப்பிட்டு முடித்த பிறகு, தனது மேக்கப்பை நீக்கிவிட்டு தான் சென்ற அதே இடங்களுக்கு மீண்டும் சென்று மக்களிடம் உரையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow