தமிழ்நாட்டில் கால்பதிக்கும் என்.ஆர்.காங்.,! முக்கிய கட்சியுடன் கைகோர்க்கும் ரங்கசாமி....

புதுச்சேரியில் ஐந்து முறை ஆட்சியைப்பிடித்த  என்.ஆர்.காங்கிரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் கால்பதிக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது .

Jul 30, 2026 - 18:19
தமிழ்நாட்டில் கால்பதிக்கும் என்.ஆர்.காங்.,!  முக்கிய கட்சியுடன் கைகோர்க்கும் ரங்கசாமி....
NR CONGRESS ENTERS TN

 புதுச்சேரியில் ஐந்து முறை ஆட்சியைப்பிடித்த  என்.ஆர்.காங்கிரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் கால்பதிக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது .

 தமிழ்நாட்டில்  புதிய அரசியல் கட்சிகளின் வருகைகளும், அதன் தாக்கங்களும், பல மாற்றங்களை கொண்டுவந்துள்ள நிலையில் அரைநூற்றாண்டுக் கழித்து திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆட்சிமாற்றத்தையும் கொண்டுவந்துள்ளது. இந்தநிலையில், அரசியலில் மூத்தவராகவும், ஐந்தாவது முறை முதலமைச்சராக உள்ள  புதுச்சேரியின் என்.ஆர்.காங்கிரஸ்  நிறுவனர் ரங்கசாமி, தனது கொடியை தமிழ்நாட்டில் நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனமுன்னதாக, கடந்த 2026 தமிழ்நாடு  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் காய்களை நகர்த்தியதாகவும், ஆனால் பாஜக அதனை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறதுஇத்தகைய சூழலில், பாஜக உதவி இல்லாமல் தமிழ்நாட்டில் தன்னந்தனியாக காலூன்ற ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாகவும், அதற்காக முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். வருகின்ற  ஆகஸ்ட் 4-ஆம் தேதி தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள ரங்கசாமி அன்றைய தினமே தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தனது பிரவேசத்தை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

 அவருக்கு ஆதரவாக இங்கு செயல்படவும், கட்சியின் செயல்பாடுகளை கண்காணிக்கவும்  பாமக நிறுவனர்  ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமனுக்கு மாநில தலைமை பொறுப்பை வழங்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக பரபர தகவல் வெளியாகியுள்ளது . முகுந்தனுக்கு பொறுப்புகள் வழங்குவதன் மூலம் பாமகவிடம் உள்ள வன்னியர் சமூக வாக்குகளை பிரிக்கவும், அச்சமூக மக்கள் மத்தியில் தனது கட்சியினுடைய செல்வாக்கை பெருக்கவும் ரங்கசாமி ஸ்கெட்ச் போட்டு வருவதாக தைலாபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 இதற்கு ஏதுவாக பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் துறவறம் பூண்டுள்ள நிலையில், அன்புமணிக்கு எதிராக சகோதரி காந்திமதியும் அவரது மகன் முகுந்தனும் செயல்படத் தொடங்கியிருப்பதாக தைலாபுரத்தில் கிசுகிசுக்கப்படுவதால், இவர்களை வைத்து காய் நகர்த்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறதுகாந்திமதி, முகுந்தனை பொறுத்தவரை பாமகவில் தொடர்ந்து நீடித்தால் அவர்களுக்கான செல்வாக்கும் அதிகாரமும் இருக்காது என்பதை நன்கு உணர்ந்துள்ளார்கள், அதனால் மாற்றுக் கட்சிக்கு சென்றால் அதிகாரமும், செல்வாக்கும் ஒருசேர கிடைக்கும் என்பதே அவர்களது நிலைபாடு என்று கூறப்படுகிறது.   

 என்னத்தான் வன்னியர் வாக்குகளை ரங்கசாமி டார்கெட் செய்வதாக கூறப்பட்டாலும் அதுமட்டுமே அவருக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கை பெருக்குமா என்பது சந்தேகமே. அரை நூற்றாண்டுக்கால அரசியல் அனுபவத்தை கொண்டிருந்தாலும் அவரால் தமிழ்நாட்டின் அரசியல் சூழலையும், புதுச்சேரியின் அரசியல் சூழலையும் பிரித்து பார்க்க முடியுமா? அதோடு தவெகவின் அபரீத வளர்ச்சியை தாக்குப்பிடிக்க முடியுமா? திராவிடக்கட்சிகளை வீழ்த்திய தவெகவிற்கு நிகராக அரசியல் சாணக்யத்தனத்தை வெளிப்படுத்துவாரா? போன்ற பல்வேறு கேள்விகள் ரங்கசாமியை சுற்றி எழத்தொடங்கியுள்ளன. இவை எல்லாவற்றையும்விட பாஜகவை எதிர்த்து NDA  கூட்டணியிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ரங்கசாமியால் அரசியல் செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர் .  

 மறுபக்கம், தவெகவுடன் ரங்கசாமி கைக்கோர்க்கலாம் என்றும்  கூறப்படுகிறது. இதனால் ரங்கசாமியின் தமிழ்நாட்டு அரசியல் பயணம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . எனவே தனித்து போட்டியா? தவெகவுடன் கூட்டணியா? ரங்கசாமி எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow