வானிலை தகவல்.....எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?

கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Aug 24, 2026 - 07:00
வானிலை தகவல்.....எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுவதால் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள்,நீலகிரி மாவட்டப்பகுதிகளில் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைமாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதிகளான, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow