‘விஸ்வநாத் & சன்ஸ்’... குமுதம் விமர்சனக் குழு!
‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.
'முந்தானை முடிச்சு'க்கு, முலாம் பூசி ஒரிஜினல் தங்கம் என்று நம்ப வைக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார், இயக்குநர் வெங்கி அட்லூரி. அம்மா ராதிகாவுக்காக அமெரிக்கா போய் வாடகைத் தாய் மூலம் ஒரு பேரனைப் பெற்றுக் கொண்டு வருகிறார், ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற சூர்யா.
பெற்றுக்கொடுத்த மமிதா பைஜு யார் என்று சூர்யாவுக்குத் தெரியாது. பின்னர் தெரிந்துகொள்ளும் சூழல் உருவாக, சூர்யாவோடும் குழந்தையோடும் சேர்ந்து வாழ நினைக்கிறார், மமிதா. அது நடந்ததா என்பதுதான் கதை மு.மு.வில் குழந்தையோடு பாக்யராஜ் கிராமத்திற்கு வருவார். இதில் சூர்யா குழந்தையோடு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகிறார். மமிதா, சூர்யாவை நெருங்க, இவர் விலகி ஓட, காரணங்கள் வேறாக இருந்தாலும் கதை ஒன்றுதான்.
சூர்யா, மமிதா, ராதிகா காமெடி கலாட்டா ரசிக்கலாம். ரவீணா டாண்டன், நாசர், பவானிஸ்ரீ கண்ணில் நிற்கிறார்கள். வெளிநாட்டுக் காட்சிகள் பளீர். ஒளிப்பதிவு நிமிஷ் ரவி. சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் நவீன் எடிட்டிங் நறுக். இசை ஜி.வி.பி. எக்ஸெலன்ட். ராதிகா இறந்த பின் சினிமா சீரியல் ஆகிவிடுகிறது.
குழந்தையைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் ஆபரேஷன் தியேட்டர் டிராமாவைத் தவிர எதுவும் மனதைத் தொடவில்லை. முருங்கைக் காய்க்குப் பதிலாக காண்டம் முகம் சுளிக்க வைக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை மன்னர் என்பது மீண்டும் உறுதியாகிறது. மொத்தத்தில் இளையராஜா, பாக்யராஜ், ஊர்வசி இல்லாத முந்தானை முடிச்சு!
'விஸ்வநாத் & சன்ஸ் -
What's Your Reaction?