தஞ்சாவூர்: எலும்புக்கூடு வரைந்து விவசாயிகள் நூதன போராட்டம்

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Nov 28, 2023 - 15:04
Nov 29, 2023 - 07:10
தஞ்சாவூர்: எலும்புக்கூடு வரைந்து விவசாயிகள் நூதன போராட்டம்

டெல்டா மாவட்டத்தில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றிற்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து புறக்கணித்த தமிழக விவசாய சங்கத்தினர் எலும்புக்கூடு வரைந்து மற்றும் எக்ஸ்ரே படத்துடன்  நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கினார் அப்பொழுது தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவர் சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் டெல்டா மாவட்டத்தில் நெற்பயிரிகள் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் காய்ந்து வரும் நிலையில் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.  சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி காய்கிறது. பூச்சியால் பாதிக்கப்படுகிறது. தற்போது ஏக்கர் ஒன்றுக்கு முப்பதாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தேசிய வங்கி கடன் மற்றும் கூட்டுறவு வங்கி கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசே விவசாயிகளுக்கு பிலிம் காட்டாதே என்றும் விவசாயிகளின் வாழ்க்கை கடைசி நிலையில் உள்ளதை சித்தரிக்கும் வகையில் விவசாயிகள் எலும்புக்கூடு போல் அவர்கள் நிலைமை உள்ளது என்பதை வலியுறுத்தி எலும்புக்கூடு படத்துடன் எக்ஸ்ரே படத்துடன் வந்து  மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும்  திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் நிலங்களை காப்பாற்ற நினைக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow