பிள்ளை வரம் அருளும் பேரரசி..திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை வழிபாட்டின் சிறப்பு!
தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயில், குழந்தை பாக்கியம் மற்றும் சுகப்பிரசவம் வேண்டி பக்தர்கள் வழிபடும் முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது.
- வி.ராம்ஜி
இங்கே, எந்த விசேஷத்துச் சென்றாலும், ‘என்ன இன்னுமா கல்யாணம் பண்ணலை’ என்பார்கள். திருமணமாகிவிட்டால்,’இன்னுமா குழந்தை பெத்துக்கலை’ என்பார்கள். திருமணம் தள்ளிப்போகும் நிலையாகட்டும் கல்யாணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பிறக்காததாக சோகமாக இருந்தாலும்... கேள்விகள் ஈட்டிமுனையென பாய்ந்து, மனசை ரணப்படுத்தும். திருமண வரம் தரும் கோயில்கள் திருமணஞ்சேரி முதலான பல தலங்கள் இருக்கின்றன. குழந்தை பாக்கியமும் தந்து, கருவில் இருந்தே சிசுவைக் காத்து, சுகப்பிரசவமும் தந்து அருள்பாலிக்கும் தலமும் இருக்கிறது. அந்தத் தலத்தின் பெயரே திருக்கருகாவூர்.
தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது திருக்கருகாவூர். இங்கே கண் கண்ட தெய்வமாக, கருணையே உருவெனக் கொண்ட தெய்வமாக, கண்களில் ஒளி ததும்பக் காட்சி தருகிறாள். அம்பாளின் திருநாமம் கர்ப்ப ரட்சாம்பிகை! சந்தான பாக்கியம் என்கிற பிள்ளை வரம் தரும் பேரரசி இவள்!
பெண்களுக்காகவே, பெண்களின் நலனுக்காகவே, பெண்களின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகவே இங்கே இருந்தபடி, மொத்த பெண்களுக்கும் அருள்புரிந்து வருகிறாள் கர்ப்ப ரட்சாம்பிகை.
திருமண பாக்கியம் தந்தருள்கிறாள். நீண்டகாலமாக பிள்ளை வரமின்றிக் கலங்கித் தவிக்கும் பெண்களுக்கு, சந்தான பாக்கியத்தை வழங்குகிறாள் திருக்கருகாவூர் தேவி.அதேபோல், கர்ப்பமானவர்கள், சுகப்பிரசவத்துக்காகவும் குழந்தை ஆரோக்கியத்துடன் நோயின்றிப் பிறக்கவும் இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்று சொல்லி வரவேண்டும். மற்ற நாட்களிலும் சொல்லிவரலாம்.
திருமணம் முடிந்த கையுடன், திருக்கருகாவூர் வந்து, கர்ப்பரட்சாம்பிகையைத் தரிசித்து, ‘எங்களுக்கு நல்ல குழந்தை பிறக்கணும்; நல்லவிதமா பிறக்கணும்’ என்று வேண்டிக்கொள்கிற புதுமணத்தம்பதியர் உண்டு.
வீட்டில் விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண பாக்கியம் கிடைக்கும். அதைடுத்து பிள்ளைச் செல்வத்தைத் தந்தருளுவாள் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.
ஹிமவத்யுத்தரே பாா்ஸ்வே சுரதா
நாம யக் ஷீனி
தஸ்யா ஸ்மா்ண மாத்ரேணா
விசல்யா கா்பிணிபவேது.
ஹே சங்கர ஸ்மரஹப் பிரமதாதி
நாதரி மன்னாத சாம்பசசிசூட
ஹரதிரிசூலின் சம்போக சுக
பிரசவ கிருதபவமே
தயாளோ ஹேமாதவி வனேச
பாலயமாம் நமஸ்தே.
கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதாலும் சகல சௌபாக்கியங்களோடு கர்ப்பப் பையிலுள்ள நோய்கள் விலகி புத்திரபாக்கியம் ஏற்படும். அதோடு பெண்களது கருவளா்ச்சிக்கு உதவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும் மந்திரத்தின் மகோன்னதத்தைச் சொல்லி சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மேலும் இந்த ஸ்லோகத்தை வீட்டில் விளக்கேற்றி, பால் பாயசம் நைவேத்தியம் செய்து அம்பாளைத் துதிக்க, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், மகத்தான பலன்கள் நிச்சயம், மகப்பேறு சுபமாக நிகழும். ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கும் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.
ஸ்ரீ மாதவீகானனஸ்தே
ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம்
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)
ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய
காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம்
பஜேதாம் ( ஸ்ரீ)
ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)
கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே – வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம்
த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் –
கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)
ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் –
வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே
ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் –
தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்-
த்வாம் (ஸ்ரீ)
ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் –
தீக்ஷி
தானந்தராமேண
தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா – புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய
நித்யம் ( ஸ்ரீ)
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கர்ப்பிணிகள், வீட்டில் விளக்கேற்றி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். பால் பாயசம் நைவேத்தியம் செய்து, அருகில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு பால்பாயசம் வழங்குங்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவது உறுதி; சுகப்பிரசவம் நிகழும் என்பது சத்தியம்!
திருக்கருகாவூர் கோயிலுக்கு ஒருமுறையேனும் தம்பதி சமேதராக வந்து வேண்டிக்கொள்ளுங்கள். இல்லறத்தை அர்த்தப்படுகிற விதமாக, வீட்டில் குவாகுவா சத்தம் கேட்கச் செய்வாள் கர்ப்பரட்சாம்பிகை!
What's Your Reaction?