கருப்பு படத்தின் வெற்றிக்கு பிறகு வெப்சீரிஸா! ஆச்சரியப்படுத்தும் த்ரிஷாவின் நெக்ஸ்ட் மூவ்...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Aug 24, 2026 - 17:50
கருப்பு படத்தின் வெற்றிக்கு பிறகு வெப்சீரிஸா! ஆச்சரியப்படுத்தும் த்ரிஷாவின் நெக்ஸ்ட் மூவ்...
Trisha joins with Nandini Reddy for New Webseries

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. வயது, தலைமுறை என எதுவும் இவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை குறைக்கவில்லை. இன்றைய இளம் தலைமுறையினரிடமும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் திரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக, சினிமாவை தாண்டி வெப் தொடர்களிலும் முன்னணி நடிகர்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில், திரிஷாவும் தற்போது அந்தப் பாதையில் அடுத்த அடியை எடுத்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா தமிழில் வெளியான "கருப்பு" படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மக்கள் கொண்டாடும் வெற்றியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் த்ரிஷா தனது அடுத்து படத்திற்கான ஸ்கிரிப்ட் செலக்ஷனில் பிசியாக இருந்து வருகிறார் என்று சினிமா வட்டாரங்கள் பேசி வந்தன.

புதிய வெப் தொடரில் திரிஷா நடிக்க இருப்பதாகவும், இந்தத் தொடரை பிரபல இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘மாஇண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர் நந்தினி ரெட்டி.

தெலுங்கில் ‘மாஇண்டி பங்காரம்’ பெரும் வெற்றி அடைந்த நிலையில் தமிழிலும் "எங்கள் தங்கம்" என்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சமந்தாவின் நீண்ட வெற்றி இடைவெளிக்கு டாட்டா கூறும் விதமாக நல்ல ஆக்ஷன் எண்டெர்டைன்மெண்ட் படமாக அமைந்து பெரும் வெற்றியை பெற்று தந்தது.

இந்நிலையில், நந்தினி ரெட்டி - திரிஷா கூட்டணி உருவாக இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதிலும், இந்த வெப் தொடர் வழக்கமான கதைக்களத்தில் இல்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்ட த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக த்ரிஷா 'மோகினி' என்ற திரில்லர் படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . 

திகில், மர்மம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுவதால், திரிஷாவின் வித்தியாசமான நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த புதிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow