வீட்டிலேயே வெண்டைக்காய்... அதிக மகசூல் பெற எளிய வழிகள்!
வீட்டுத் தோட்டத்தில் வெண்டைக்காயை எளிதாக வளர்க்கும் முறை, உரம், நீர்ப்பாசனம், பூச்சி மேலாண்மை மற்றும் அதிக மகசூல் பெறும் பயனுள்ள குறிப்புகள்.
என் வீட்டுத் தோட்டத்தில்!
நீங்க சொன்ன மாதிரி தககாளி செடிவெச்சேன். செடி ரொம்ப நல்லா வளர்ந் துடுச்சி. அடுத்து வெண்டைக்காய் செடி வளர்ப்பது பற்றியும் சொல்லுங்களேன்..." என்று வடலூரிலிருந்து சிநேகிதி திலகவதி கேட்டிருந்தார்.
நம் வீட்டுத் தோட்டத்தில் அதிக சிரமம் இல்லாமல், குறைந்த இடத்திலேயே அதிக மகசூல் தரும் காய்கறிகளில் வெண்டைக்காய் முக்கியமானது. மாடித்தோட்டம், பால்கனி, முற்றம் என எங்கிருந்தாலும் ஒரு பெரிய தொட்டி இருந்தாலே போதும். சரியான முறையில் வளர்த்தால் இரண்டு மாதங் களுக்குள் தினமும் சமையலுக்கு பறித்துக் கொள்ளும் அளவுக்கு காய்கள் கிடைக்கும். வீட்டிலேயே ரசாயனமில்லாத வெண் டைக்காயை எப்படி வளர்ப்பது பார்ப்போம்.
வெண்டை விதைகள்
சந்தையில் கிடைக்கும் நல்ல ரக விதைகளை வாங்கலாம் அல்லது நன்றாக முற்றிய வெண்டைக் காயை வாங்கி, அதை சில நாட்கள் நிழலில் உலர வைத் தால் உள்ளே இருக்கும் விதைகள் நன்கு காய்ந்து விடும். அவற்றை எடுத்தும் சேமித்து விதையாக பயன்படுத்தலாம். விதைகளை நேரடியாக விதைப்பதை விட, 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும். தண்ணீரில் மூழ்கும் விதைகளே தரமானவை. மிதக்கும் விதைகள் பலவீனமானவை.
வெண்டை செடி வளர தொட்டி
வெண்டைக்காய்க்கு ஆழமும் அகலமும் இருக்கும் தொட்டி மிகவும் முக்கியம். தொட்டி அகலமானதாக இருந்தால் செடி நன்றாக வளர உதவும். 12×12 இன்ச் தொட்டி அல்லது 15-18 இன்ச் குரோ பேக் ஏற்றது. தொட்டியின் அடியில் தண்ணீர் வெளியேற துளைகள் இருக்க வேண்டும். செடி ஆரோக்கியமாக வளர மண் வளமாக இருக்க வேண்டும். 50% சாதாரண மண், 40% இயற்கை உரம் மற்றும் 10% மணல் போன்றவற்றை சேர்த்து மண் கலவை தயார் செய்ய வேண்டும் தொட்டிக்கு 2 அல்லது 3 விதைகள் நட வேண்டும். மக்கிய உரம் மண்ணை மேலும் வளப்படுத்தலாம்.
செடி எப்போது வளரும்?
ஓர் அங்குல ஆழத்தில் விதைகளை வைக்க வேண்டும் மேலே மண்ணை மூடி தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 10 நாட்களில் முளைகள் வெளிவரும். ஒவ்வொரு தொட்டியிலும் 2-3 விதைகள் போடலாம். முளைத்த பிறகு ஆரோக்கியமாக இருக்கும் ஒன்று அல்லது இரண்டு செடியை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அகற்ற வேண்டும். இதனால் அந்தச் செடிக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைத்து அதிக காய்கள் காய்க்கும்.
செடிக்கு தண்ணீர்
தினமும் காலையில் தண்ணீர் விடவும். வளரும் பருவத்தில் தண்ணீர் வள மாக பாய்ச்ச வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச் சலாம்தொட்டிகளில் வெண் டைக்காய் வளர்த்தால் தரை யில் வளரும் செடிகளை விட அவற்றுக்குச் சற்று அதிகம் தண்ணீர் தேவை.
வெண்டைக்காய் சூரிய ஒளியை மிகவும் விரும்பும் பயிர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 6 முதல் 8 மணி நேரம் நேரடி வெயில் கிடைத்தால் செடி வேகமாக வளர்ந்து பூக்களும் அதிகமாக வரும்.
வெண்டை செடிக்கு ஏற்ற உரம்
நடவு செய்த 20 முதல் 25 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயற்கை உரம் சேர்க்க வேண்டும். மண்புழு உரம், மக்கிய மாட்டுச் சாணம், காய்கறி கழிவுகளால் தயாரித்த கம்போஸ்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றை மாதத்திற்கு ஒருமுறை சேர்த்தால் தொடர்ந்து பூக்களும் காய்களும் அதிகமாக வரும்.
வாரத்திற்கு ஒருமுறை பஞ்சகவ்யா அல்லது ஜீவாமிர்தம் போன்ற இயற்கை ஊட்டச்சத்து கரைசலையும் பயன்படுத்தலாம்.
வெண்டைக்காய் பறிப்பது எப்போது?
நடவு செய்த 45 முதல் 55 நாட்களுக்குள் முதல் வெண்டைக்காய்கள் பறிக்க தயாராகி விடும். காய்கள் 2 முதல் 3 அங்குலம் நீளம் வந்த உடன் அறுவடை செய்ய வேண்டும். மிக இளசாகவும் வேண்டாம். முற்றிய பிறகும் பறிக்க வேண்டாம்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். வெண்டைக்காய் பறிக்கும்போது சுத்தரிக்கோலைப் பயன்படுத்தி காயின் காம்புகளுக்கு சற்று மேலாக பறிக்க வேண் டும்.வெட்டிய இடத்திலிருந்து மற்றொரு காய் வளரத் தொடங்கும். செடி காய்ப்பதை நிறுத்தும் வரை வெண்டைக்காய் அறுவடை செய்யலாம்.வெண்டைக்காய் அறுத்து வளரக் கூடிய பயிர்' என்று அழைக்க காரணமே நீங் கள் எவ்வளவு அதிகமாக பறிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அது வளரும்.
வெண்டை செடியில் பூச்சி வருமா?
வெண்டைக்காய் பெரும் பாலும் நன்றாக வளர்ந்துவிடும். மற்ற தாவரங்களை போலவே இவற்றிலும் நூற்புழுக்கள், கம்பளிப்புழுக்கள், வெள்ளை ஈக்கள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகள் வர செய் யும். அதை கவனிக்காமல் விட்டால் செடிகளை பாதிக்க லாம். மேலும் காய்கள் காய்க்கும் போது அசுவினி பூச்சிகளும் செடியில் வரக்கூடும். இந்தப் பூச்சிகளுக்கு பூச்சிக்கொல்லி சோப்புத் தெளிப்பை பயன் படுத்தலாம். செடிகளின் மீது வேப்ப எண் ணெய் அல்லது தண்ணீரில் பூண்டு நசுக்கி சேர்த்து தெளிக்க வேண்டும்.
வெண்டைக்காய் இலைகளை தாக் கும் இலைச் சாம்பல் நோய் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நோய் தாக்கினால் இலைகள் வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். குளிர்காலங்களில் இந்நோய்த் தாக்குதல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை கட்டுப்படுத்த சூடோமோனஸ் தெளிக் கலாம் எனினும் பூச்சிகள் வராமல் தவிர்க்க வேப்பெண்ணெய் கரைசலை வாரம் ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே பூச்சி, நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை பாதுகாத்து விடலாம். 3 முதல் 4 மாதங்கள் வரை வெண்டைக்காய் அறுவடை செய்யலாம்.
தோட்டம் வளரும்...
What's Your Reaction?





